ETV Bharat / state

வேலூர் பொருட்காட்சியில் அனுமதியின்றி ஆபத்தான முறையில் ராட்டினங்கள்.. அதிகாரிகள் நடவடிக்கை என்ன?

author img

By

Published : Apr 26, 2023, 12:03 PM IST

Authorities inspected the fun rides at the Vellore exhibition and were banned for operating without proper permission
வேலூர் பொருட்காட்சியில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கிய ராட்டினக்களை ஆய்வு செய்த அதிகாரிகள் ராட்டினங்கள் இயங்க தடை விதித்தனர்

வேலூரில் பொருட்காட்சியில் உரிய அனுமதி இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் இயங்கிய ராட்டினங்கள் இயங்குவதற்கு அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

வேலூர்: வேலூர் கோட்டை மைதானத்தில் தாஜ்மஹால் பொருட்காட்சி என்ற பெயரில் கடந்த 14ம் தேதி முதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்ட ராட்டினங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக வேலுார் மாவட்ட நிர்வாகத்திற்கு பல புகார்கள் வந்தது.

இதைதொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து ராட்டினங்களை இயக்க அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ராஜன் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், "வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலூர் கோட்டை மைதானத்தில் கடந்த 14ம் தேதி முதல் விஜய் டிரேடர்ஸ் கோயம்புத்தூர் நிர்வாகம் சார்பில் தாஜ்மஹால் என்ற பெயரில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் Giant wheel, RANGER, FUN WORLD ஆகிய மூன்று ரங்கராட்டினங்களும் எந்தவித அனுமதியும் பெறாமல் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கின்ற வகையில் இயக்கப்பட்டது.வேலூர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் தணிக்கை செய்து உடனடியாக அவற்றை இயக்க கூடாது என நிறுத்தி வைக்கப்பட்டது" என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிக கூடும் இடமான பொருட்காட்சியில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: TN Anganwadi: கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.