ETV Bharat / state

போதிய விலையின்றி மஞ்சள் கிழங்கும், மண்பானைகளும்: சிறப்புத் தொகுப்பு

author img

By

Published : Jan 10, 2020, 4:57 PM IST

at vellore pongal festival season pots lost its way in markets
போதிய விலையின்றி மஞ்சள் கிழங்கும்! மண்பானைகளும்!

வேலூர்: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் மஞ்சள் கிழங்குகளுக்கும், மண் பானைகளுக்கும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளும் தொழிலாளர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு பண்டிகைகள் வந்தாலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள். இந்த பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பொங்கல் வைக்க பயன்படுத்தும் மண்பானை தயாரிக்கும் பணி, வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இவர்கள் முதலில் பானைகள் செய்வதற்கு முறையாக மண்ணை குழைத்து பக்குவப்படுத்துகின்றனர். பின்னர் பழைய முறைப்படி சக்கரத்தின் உதவியோடும் தற்போதைய நவீன இயந்திரத்தின் உதவியோடும் மண்பானைகளை தயார் செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியும் இங்கு நடைபெறுகிறது.

இந்தத் தொழில் குறித்து பார்வையற்ற மண்பாண்ட தொழிலாளி உமாபதி கூறுகையில், பல வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த 13 வருடங்களாக தனக்கு கண் பார்வை போய்விட்டது என்றும் இருப்பினும் தொடர்ந்து மண்பானைகள் மற்றும் மண் அடுப்புகள் செய்து வருவதாகவும் தற்போது பொங்கல் விற்பனை மந்தமாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாகரிக வளர்ச்சியால் நலிவடைந்து வரும் இந்தத் தொழிலுக்கு மூலதனமாக இருக்கின்ற மண்ணுக்கே திண்டாடுவதாக தெரிவிக்கும் தொழிலாளிகள், காலங்காலம் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் தங்களுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை என்று வருந்துகின்றனர். அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தத் தொழிலை பாதுகாக்க வேண்டுமென்றும் செய்கூலிக்கு தகுந்த விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்காக மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளிகளுக்குதான் இந்த பாதிப்பு என்றால், மஞ்சள் விளைவிக்கும் விவசாயிகளுக்கோ மற்றொரு பரிதாபம்.

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக வேலூர் மாவட்டத்தில்தான் அதிகளவில் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக கணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் கிழங்கை பயிரிட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு பயிரிடப்படும் இந்த மஞ்சளானது தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

இதுகுறித்து மஞ்சள் விவசாயி அன்பு கூறுகையில், இங்கு உற்பத்தி செய்யும் மஞ்சளை ஈரோடு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் இதன் மூலம் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே வேலூர் மாவட்டத்திலேயே ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்றும் இதுதவிர மழை காலங்களில் பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட்டு செடிகள் காய்ந்து விடுகிறது இதன் காரணமாகவும் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார். மேலும் உரிய விலை இல்லாமல் பாதிக்கப்படும் மஞ்சள் விவாசயிகள் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசில் ஒன்றாக மஞ்சளையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

போதிய விலையின்றி மஞ்சள் கிழங்கும், மண்பானைகளும்: சிறப்புத் தொகுப்பு

இதையும் படியுங்க: சமத்துவ பொங்கல் - அசத்திய கல்லூரி மாணவிகள்!

Intro:வேலூர் மாவட்டம்

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் மஞ்சள் கிழங்குகளுக்கும் மண் பானைகளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தொழிலாளர்கள் வேதனை
Body:தமிழகத்தில் பல்வேறு திருவிழாக்கள் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டாலும் தை பொங்கல் திருவிழா அனைத்து மக்களின் திருவிழாவாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் தைப்பொங்கல் தமிழர் திருநாள் என்று அழைக்கப்படுகிறது அத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பொங்கல் அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது பொதுவாக தைத்திருநாள் என்றாலே தித்திக்கும் கரும்புடன் வீடுகளில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம் அதிலும் குறிப்பாக மண்பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இந்த மண்பானைகள் உற்பத்தி செய்யப்படுகிறது இருப்பினும் மாறிவரும் சமூகச் சூழல் காரணமாக நாளடைவில் மண்பானை தொழில் நலிவடைந்து வருகிறது வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை நகர்ப்புறங்களில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்டம் தொழில் செய்து வந்தனர் ஆனால் தற்போது 40க்கும் குறைவான குடும்பங்கள் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இருந்தாலும் மனம் தளராமல் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து வேலூர் அடுத்த கொசப்பேட்டை பகுதியில் தொழிலாளர்கள் பொங்கலை முன்னிட்டு மண் பானைகள் தயார் செய்து வருகின்றனர் இன்னும் பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ளதால் பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது அதுமட்டுமல்லாமல் மண் அடுப்புகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது இதற்காக அருகில் உள்ள ஏரிகளில் இருந்து அரசின் அனுமதி பெற்று மணல் அள்ளி வந்து அதை பக்குவப்படுத்தி மண்பானைகள் செய்கின்றனர் பழைய முறைப்படி சக்கரத்திலும் இயந்திரத்தின் மண்பானைகள் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் காலம் காலமாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் தங்களுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை என்றும் உற்பத்தி செய்வதில் அரசிடமிருந்து உதவிகள் சரிவர கிடைப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் அதாவது அரசாணைப்படி மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரியில் இலவசமாக மணல் அள்ளி கொள்ளலாம் அதற்கான வாகன கட்டணம் மட்டும் தொழிலாளர்கள் செலுத்த வேண்டும் ஆனால் தற்போது ஏரியில் மணல் அள்ளும் போது அந்த பகுதியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் கமிஷன் பெறுவதால் மணல் அள்ள அதிக பணம் ஆகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக ஒரு வண்டி மணல் பெறுவதற்கு 4000 வரை செலவாகிறது என தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர் ஏகாம்பரம் கூறுகையில், "நான் ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றேன். அதன்பிறகு எனது தந்தை கற்றுக்கொடுத்த மண்பாண்ட தொழிலை தற்போது வரை தொடர்ந்து செய்து வருகிறேன் தற்போது பொங்கலை ஒட்டி மண்பானைகள் செய்து வருகிறோம் ஆனால் அரசிடம் எங்களுக்கு சரிவர உதவிகள் கிடைக்காததால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது குறிப்பாக மணல் அள்ளுவதில் பெரும் சிரமம் உள்ளது போதிய இடவசதி இல்லாததால் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் என்று தெரிவித்தார் அதேபோல் அதே பகுதியை சேர்ந்த உமாபதி கூறுகையில் நான் பல வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன் கடந்த 13 வருடங்களாக எனக்கு கண் பார்வை போய் விட்டது இருப்பினும் தொடர்ந்து மண்பானைகள் மற்றும் மண் அடுப்புகள் செய்து வருகிறேன் பொங்கல் பண்டிகைக்கு விற்பனை நடைபெற்று வருகிறது கடந்த காலங்களை காட்டிலும் தற்போது பொங்கல் விற்பனை மந்தமாகவே இருக்கிறது ஆகவே இந்த தொழிலை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி கூறுகையில் நான் 20 வயதிலிருந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன் மண்பானைகள் மண் பாத்திரங்கள் அடுப்புகள் பூஜை பாத்திரங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறேன் பொங்கல் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். வளர்ந்து வரும் நாகரிக மாற்றத்திற்கு ஏற்ப இது போன்ற பாரம்பரிய தொழில்கள் அழிந்து வருகிறது எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த மண்பாண்டம் தொழிலை ஊக்குவிக்க புதிய முயற்சிகளை கையாள வேண்டும் என்பதே இப்பகுதி தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் பொங்கல் வைப்பதில் மண்பானைக்கு அடுத்தபடியாக மஞ்சள் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த செயலை ஆரம்பித்தாலும் மங்களகரமாக அமைய வேண்டும் என்பதற்காக மஞ்சள் கிழங்கை வைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக வேலூர் மாவட்டத்தில் தான் அதிகளவில் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது குறிப்பாக வேலூர் அடுத்த கணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர் அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் பயிரிட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது இந்த மஞ்சள் செடி வளர்ந்து கிழங்கு உற்பத்தி ஆக கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிறது எனவே வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உற்பத்தி செய்யும் இந்த மஞ்சள் கிழங்குகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர் அதாவது ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் கிழங்கு விற்பனை செய்வதற்காக அரசு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் அங்கு நேரடியாக சென்று தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்கின்றனர் இதன் மூலம் அதிக லாபம் ஈட்டுகின்றனர் அதேசமயம் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இல்லாததால் இங்கிருந்து மஞ்சள் கிழங்கினை ஈரோடு மாவட்டத்திற்கு அனுப்பவேண்டியுள்ளது. இதன் மூலம் லாரி வாடகை கட்டணம் ஏற்றி இறக்க கூலி என பல வகைகளில் செலவு ஏற்படுவதால் போதிய விலை கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளனர் வழக்கம்போல் இந்த ஆண்டும் எங்களுக்கு பொங்கல் தித்திக்கும் அளவில் இல்லை என்றும் அரசு மஞ்சள்கிழங்கு உற்பத்தியை மேம்படுத்த வேலூர் மாவட்டத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைத்தல் வேண்டும் எனவும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர் இதுகுறித்து கீழரசம்பட்டு விவசாயி அன்பு கூறுகையில், நாங்கள் காலங்காலமாக மஞ்சள் விவசாயம் செய்து வருகிறோம் தற்போது பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் கிழங்கு அறுவடைக்கு தயாராக உள்ளது என்ன தான் ஆண்டுதோறும் மஞ்சள் பயிரிட்டாலும் எங்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை இங்கு உற்பத்தி செய்யும் மஞ்சளை ஈரோடு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் இதன் மூலம் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது எனவே வேலூர் மாவட்டத்திலேயே ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் இதுதவிர மழை காலங்களில் பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட்டு செடிகள் காய்ந்து விடுகிறது இதன் காரணமாகவும் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது எனவே மஞ்சள் விவசாயத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் விவசாயம் மற்றும் நமது பாரம்பரிய தொழில் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது இது போன்ற சூழ்நிலையில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில் தான் வருங்காலத்தில் விவசாயத்தையும் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

ஈடிவி பாரத் செயலுக்காக வேலூர் மாவட்டத்திலிருந்து ஆர் மணிகண்டன்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.