ETV Bharat / state

திமுகவினர் கின்னஸ் சாதனை படைத்தவர்கள்: ஆர்.பி.உதயகுமார் தடாலடி!

author img

By

Published : Jul 25, 2019, 4:36 PM IST

வேலூர்: பொய் சொல்வதில் திமுகவினர் கின்னஸ் சாதனை படைத்தவர்கள் என வேலூர் மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்

ஆர்.பி.உதயகுமார்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றன.

அந்த வகையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதவனூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திண்ணை பரப்புரை மேற்கொண்டார்.

வேலூர் மக்களவை இடைத்தேர்தல் பரப்புரையின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அப்போது பேசிய அவர், ”இதுவரை எத்தனையோ பொதுத் தேர்தல், இடைத் தேர்தலை சந்தித்துள்ளோம். ஆனால் இப்போதுதான் முதன்முதலாக தடைபட்ட தேர்தலை சந்திக்கின்றோம். வரும் தேர்தலில் பொய் பரப்புரைகளை முறியடிக்கும் வகையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சாதி, மதம், இனம் வேறுபாடின்றி உழைக்க வேண்டும்.

திமுகவினர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறிவந்தனர். ஆனால் அது நடைபெறவில்லை. திமுகவினர் மக்களிடையே பொய் பரப்புரையை மேற்கொள்வார்கள். ஏனென்றால் பொய் சொல்வதில் அவர்கள் கின்னஸ் சாதனை படைத்தவர்கள்” என்றார்.

Intro:
பொய் சொல்லுவதில் திமுகவினர் வல்லவர்கள் கின்னஸ் சாதனை படைக்க கூடியவர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வாங்குவதை போல பொய் சொல்லுவதிலே போட்டியிட்டால் முதல் பரிசு ஸ்டாலினுக்கு தான் கிடைக்கும்,

ஆம்பூர் அருகே திண்ணை பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட வருவாய் துறை அமைச்சர் கே.பி உதயகுமார் பொது மக்கள் மத்தியில் பேச்சு.


Body: வேலூர் மாவட்டம்ஙழ ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்தில் வேலூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வருவாய் துறை அமைச்சர் கே.பி.உதயகுமார் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.


இதில் பொதுமக்களிடையே பேசிய உதயகுமார்,

மேலும் பேசிய அவர் இதுவரை எத்தனையோ பொதுத்தேர்தல், இடைத்தேர்தலை சந்தித்துள்ளோம், ஆனால் இப்போது தான் முதன்முதலாக தடைப்பட்ட தேர்தலை சந்திக்கின்றோம்,

வரும் தேர்தலில் பொய்பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் சாதி மதம் இனம் வேறுபாடின்றி உழைக்க வேண்டும்.

திமுகவினர் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறிவந்தனர் ஆனால் அது நடைப்பெறவில்லை.

அவர்கள் மக்களிடையே பொய் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள் ஏனென்றால் அவர்கள் பொய் சொல்லுவதில் கின்னஸ் சாதனை புரிபவர்கள் என குற்றஞ்சாட்டினார்.


Conclusion: மேலும் இந்த திண்ணைப்பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.