ETV Bharat / state

வி.ஐ.டி பல்கலை அறிவுசார் திருவிழா.. இந்தியா தொழில்நுட்ப அறிவியலில் வளர்ந்து வருவதாக அனுஜ் பல்லா பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 6:20 PM IST

VIT: வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அறிவுசார் திருவிழாவில், உலக அளவில் இந்தியா தொழில்நுட்ப அறிவியல் துறையில் வளர்ந்து வருவதாக டெக் மகேந்திரா குழும டிஜிட்டல் மற்றும் க்ளவுட் திட்ட தலைவர் அனுஜ் பல்லா தெரிவித்துள்ளார்.

வி.ஐ.டி பல்கலை அறிவுசார் திருவிழா
வி.ஐ.டி பல்கலை அறிவுசார் திருவிழா

வி.ஐ.டி பல்கலை அறிவுசார் திருவிழா

வேலூர்: வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 14வது ஆண்டாக அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழா இன்று (செப்.22) தொடங்கியது. இதில் 150-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் சிறப்பான படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருள்கள் வழங்கப்பட உள்ளது.

விழாவின் துவக்கமாக, ரோபோ இயந்திரம் விழா துவக்கத்திற்கான லோகோவை திறந்து வைத்து, அருகில் இருந்த மணியை அடித்தது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டெக் மகேந்திரா குழும டிஜிட்டல் மற்றும் க்ளவுட் திட்ட தலைவர் (Tech Mahindra Digital and Cloud Transformation Leader) அனுஜ் பல்லா பேசுகையில், “உக்ரைன் போரால் ஐரோப்பாவில் தகவல் தொழில்நுட்பம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவிலும் வீட்டுக்கடன் அதிகமாக உள்ளது. இது தற்போது இந்தியாவிற்கு சாதகமான சூழல் ஆகும்.

நமக்கு போட்டியாக இருக்கும் சீனாவில் 20 சதவீதம் வேலையின்மை உள்ளது. மேலும், இந்தியாவில் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் (Startup Companies) வேலையின்மையை சரி செய்வதற்காக அதிகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. உலகில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க: நாயகன் மீண்டும் வரார்! மீண்டும் பணியை துவங்குமா விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர்! ஆவலுடன் காத்திருப்பு!

இந்தியா 2030ஆம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் முதல் 3 இடத்திற்குள் இடம் பெறும். தற்போது இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் ஜி.டி.பியில் தகவல் தொழில்நுட்பம் 7.2 சதவீத பங்கு வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறை அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சி அடையும்.

மாணவர்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். தற்போது உலகம் மாறி வருகிறது. முழு நேர வேலை, பகுதி நேர வேலை போன்றவை உருவாகி வருகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

இதையும் படிங்க: "இது முடிவு இல்லை, ஆரம்பம் தான்".. சந்திராயன்-3 விண்கலம் குறித்து முன்னாள் இஸ்ரோ இயக்குநர் சிவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.