ETV Bharat / state

சொத்து பிரச்சனையில் தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணன்கள்!... திருச்சியில் நடந்த திகில் சம்பவம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 9:56 PM IST

worker-hacked-to-death-over-property-issue-in-trichy
சொத்து பிரச்சனையில் தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணன்கள்!...

Trichy Murder: மணப்பாறை அருகே சொத்து பிரச்சினையில் கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி: திருச்சி மாநகர் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள கணவாய்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி மகன் முருகேசன். கூலித் தொழிலாளியான இவருக்கும், இவரது பெரியப்பா ராஜா குடும்பத்தினருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. பல ஆண்டுகளாகச் சொத்து பிரச்சினை இருந்து வரும் நிலையில், இது சம்பந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர்களிடையே இருந்த சொத்து பிரச்சனை கடந்த சில நாட்களாக மீண்டும் தலை தூக்கிய நிலையில், அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதால், ராஜாவின் மகன்கள் செல்லதுரை, பாலையா, பொன்னுச்சாமி உள்ளிட்ட மூவரும் முருகேசன், அவரது சகோதரர் கருப்பையா மற்றும் உறவினர் பிச்சை உள்ளிட்டோரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர்.

இதனால் மூவரும் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சாய்ந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர், மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு முருகேசனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேரையும் மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து முருகேசனின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சினையில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: குடிபோதையில் கூலி தொழிலாளி கல்லால் தாக்கி கொலை... போலீசார் தீவிர விசாரணை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.