ETV Bharat / state

வைகுண்ட ஏகாதசிக்காக ஶ்ரீரங்கம் போறீங்களா! அப்ப கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 10:30 AM IST

வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் மேற்கொண்டு உள்ளார்.

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 23.12.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு 22.12.2023ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 24.12.2023-ம் தேதி 2 மணி வரை கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றது. அதன்படி விவரங்கள் பின்வருமாறு,

நகரப் பேருந்துகள்: மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகர பேருந்து வழித்தடங்கள் அண்ணாசிலை - காவேரி பாலம் - மாம்பழச்சாலை - திருவானைக்கோவில் ட்ரங்க் ரோடு, காந்தி ரோடு - JAC கார்னர், EVS சாலை - ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி, பின்பு ஸ்ரீரங்கத்திலிருந்து அம்மா மண்டபம், மாம்பழச்சாலை, காவேரி பாலம், ஓடத்துறை, சத்திரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி, மண்ணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் நகரப் பேருந்து வழித்தடங்கள் அண்ணாசிலை - காவேரி பாலம் மாம்பழச்சாலை - திருவானைகோயில் ட்ரங்க் ரோடு - சோதனை சாவடி எண்.6 கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும்.

திரும்பி வரும் போது கொள்ளிடம் பாலம் - சோதனை சாவடி எண்.6 - திருவானைகோயில் ட்ரங்க் ரோடு - காந்தி ரோடு - ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை - காவேரி பாலம் - சத்திரம் பேருந்து நிலையம். பெரம்பலூர், அரியலூர், துறையூர் மற்றும் கடலூர் மார்க்கம் சென்று வரும் புறநகரப் பேருந்துகள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாதை வழியாகவே நகருக்குள் வராமல் சென்று வர வேண்டும்.

பக்தர்களின் வாகனங்கள் வந்து செல்ல வேண்டிய வழித்தடங்கள்

முக்கிய நபர்களின் வாகனங்கள்: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு வரும் முக்கிய நபர்கள் காவேரி பாலம் வழியாக, மாம்பழச்சாலை, அம்மாமண்டபம் ரோடு, ராகவேந்திரா ஆர்ச், பீட்-38 வந்து மேலவாசல் வழியாக தெற்கு சித்திரை வீதியில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே திரும்பிச் செல்ல வேண்டும்.

வாகன அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள்: (Proposed New Bus Stand) வாகன அனுமதிச் சீட்டு பெற்று கார்களில் வரும் பக்தர்கள், காவேரி பாலம், மாம்பழச் சாலை சந்திப்பு, திருவானைக்கோயில் ட்ரங்க் ரோடு, காந்தி ரோடு வந்து அரசு மருத்துவமனை எதிரில் உள்ள புதிய வாகன நிறுத்துமிடத்தில் கார்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் JAC கார்னர், EVS சாலை, ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம், அம்மா மண்டபம், மாம்பழச் சாலை, காவேரி பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

வாகன அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்கள்: கார்கள் சென்னை, சேலம், அரியலூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார்கள் "Y" ரோடு சந்திப்பு - பஞ்சக்கரை ரோடு - தசாவதார சன்னதி - மேலூர் ரோடு - மேலவாசல் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் ராகவேந்திரா ஆர்ச், அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, காவேரி பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

கரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார்கள்: அண்ணாசிலை - காவேரி பாலம் - மாம்பழச்சாலை சந்திப்பு - திருவானைக்கோயில் ட்ரங்க் ரோடு - சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு - தசாவதார சன்னதி - மேலூர் ரோடு வழியாக மேலவாசல் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் ராகவேந்திரா ஆர்ச், அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, காவேரி பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார்கள் பால்பண்ணை - சஞ்சீவிநகர் சந்திப்பு - "Y" ரோடு சந்திப்பு - பஞ்சக்கரை ரோடு - தசாவதார சன்னதி - மேலூர் ரோடு வழியாக மேலவாசல் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் ராகவேந்திரா ஆர்ச், அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, காவேரி பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

பேருந்துகள்:- மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பேருந்துகள் பால்பண்ணை சஞ்சீவிநகர் சந்திப்பு - "Y" ரோடு சந்திப்பு காவல் சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே செல்ல வேண்டும்.

சென்னை, அரியலூர், சேலம், மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பேருந்துகள்: "y" ரோடு சந்திப்பு - பஞ்சக்கரை ரோடு - பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே செல்ல வேண்டும்.

கரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பேருந்துகள்: அண்ணாசிலை ஓடத்துறை பாலம் - ஓயாமாரி ரோடு, சென்னை பைபாஸ், சஞ்சீவிநகர் சந்திப்பு - "Y" ரோடு சந்திப்பு - காவல் சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே செல்ல வேண்டும்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வேன்கள்: வேன்களில் வரும் பக்தர்கள் காவேரி பாலம், மாம்பழச்சாலை சந்திப்பு, திருவானைக்கோயில் ட்ரங்க் ரோடு, காந்தி ரோடு வழியாக நெல்சன் ரோட்டில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் மைதானத்தில் வேன்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் அதே வழியாக வெளியே திரும்பிச் செல்ல வேண்டும்.

மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகர பேருந்து வழித்தடங்கள் அண்ணாசிலை - காவேரி பாலம் - மாம்பழச்சாலை - காந்தி ரோடு - JAC கார்னர், EVS சாலை ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி, பின்பு ஸ்ரீரங்கத்திலிருந்து அம்மா மண்டபம், மாம்பழச்சாலை, காவேரி பாலம், அண்ணாசிலை, சத்திரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி, மண்ணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் நகரப் பேருந்து வழித்தடங்கள். அண்ணாசிலை - காவேரி பாலம் - மாம்பழச்சாலை - திருவானைக்கோயில் ட்ரங்க் ரோடு - சோதனை சாவடி எண்.6 - கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும் போது கொள்ளிடம் பாலம் - சோதனை சாவடி எண்.6 - திருவானைக்கோயில் ட்ரங்க் ரோடு - காந்திரோடு - ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை - காவேரி பாலம் - சத்திரம் பேருந்து நிலையம்.

இரண்டு சக்கர வாகனங்கள்:

1) அண்ணாசிலை, காவேரி பாலம், மாம்பழச்சாலை, அம்மா மண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, தெப்பக்குளம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

2)அண்ணாசிலை, காவேரி பாலம், மாம்பழசாலை, திருவானைக்கோயில் ஜங்சன், நெல்சன் ரோடு, ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி மைதானம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

3) கொள்ளிடம் பாலம், பஞ்சக்கரை ரோடு - பஞ்சக்கரை ரோடு - யாத்ரி நிவாஸ் - கொள்ளிடம் முருகன் கோவில் தெப்பக்குளம் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் அதே வழியாக வெளியே செல்ல வேண்டும்.

மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ)

1) அண்ணாசிலை, காவேரி பாலம், மாம்பழச்சாலை, அம்மா மண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, நெடுந்தெரு வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

2) கொள்ளிடம் பாலம், பஞ்சக்கரை ரோடு - யாத்ரி நிவாஸ் - தசாவதார சன்னதி நெடுந்தெரு வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் அதே வழியாக வெளியே செல்ல வேண்டும்.

மேற்கண்டவாறு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்காக பொதுமக்களின் நலன் கருதி, வாகன போக்குவரத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் திருச்சி மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் 4 முக்கிய ரயில்கள் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.