ETV Bharat / state

அறநிலையத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்...

author img

By

Published : Oct 10, 2022, 5:18 PM IST

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

அறநிலையத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்...
அறநிலையத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்...

காலிப்பணியிடங்கள்:

காவலர்கள்‌ – 39

துப்புரவு பணியாளர்கள் – 66

காவலர்‌ – 21

தூர்வை – 20

கல்வி தகுதி:

இந்த காலிப்பணியிடங்களுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தைச்‌ சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்‌.

வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

காவலர்கள்‌ – ரூ.15,900 - 50,400

துப்புரவு பணியாளர்கள் – ரூ.10,000 – 31,500

காவலர்‌ – ரூ.11,600 - 36,800

தூர்வை – ரூ.10,000 – 31,500

விண்ணப்பிக்கும் முறை:

இந்த காலிப்பணியிடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் https://srirangamranganathar.hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து என்ன பணியிடத்திற்கான விண்ணப்பம்‌ என தெளிவாக குறிப்பிட்டு “இணை ஆணையர்‌ / செயல்‌ அலுவலர்‌, அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்‌, ஸ்ரீரங்கம்‌, திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌ – 620006.” என்ற முகவரியில் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல்‌ வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும்‌, அஞ்சல்‌ உறையுடனும்‌ இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 17.10.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: Job alert: அரசு மருத்துவமனையில் Lab Technician காலிப்பணியிடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.