ETV Bharat / state

'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் இருக்காது: அமைச்சர் கே.என்.நேரு!

author img

By

Published : Aug 20, 2023, 10:25 PM IST

TRICHY NEET PROTEST: திமுக எதிர்கட்சியாக இருக்கும் போதும், ஆளுங்கட்சியாக இருக்கும் போதும் நீட் தேர்வுக்கு எதிராக பல போராட்டங்களை திமுக நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Trichy Neet Protest
Trichy Neet Protest

திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்திய உண்ணாவிரத போராட்டம்

திருச்சி: நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷன் காதி கிராஃப்ட் பகுதியில் திருச்சியின் தெற்கு, வடக்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் காலை முதல் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் முடிவில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று உரை ஆற்றினார்கள்.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது: தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து திமுக அரசு பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் அல்லாமல் அமைச்சர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து மனுக்களும் கொடுக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆளுநர் நீட் தேர்வு ரத்து செய்யும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பிலே போட்டுவிட்டார்.

தமிழக ஆளுநர் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் எதிர்க்கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அதற்கும் அஞ்சாமல் தமிழக மக்களுக்காக நமது முதலமைச்சர் போராடி வருகிறார். மத்தியில் திமுக இணைந்துள்ள 'இந்தியா' கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால் தமிழ்நாட்டில் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அவர் பேசினார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும் போது: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் படி தமிழ்நாடு முழுவதும் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பாக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வால் தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா மரணம் அனைவரையும் உருக்குலையச் செய்தது.

திமுக அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அனிதாவின் இறுதிச் சடங்கு முடியும் வரை அவர் குடும்பத்துடன் இருந்தோம். மேலும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு நீட் தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் ஜெகதீஸ்வரன் என்ற மாணவர். நீட் தேர்விற்கு எனத் தனியார் பயிற்சி மையங்கள் அதிகரித்துள்ளது.

பணம் படைத்தவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஏழை, எளிய மக்கள் மருத்துவ கனவு கனவாகவே இருக்கிறது. ஆகையால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி அதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் ஜனாதிபதி வரை எடுத்துச் சென்றுள்ளோம். ஆனால், அந்த கோப்புகளில் இன்று வரை ஜனாதிபதி அவர்கள் கையெழுத்து இடவில்லை.

தொடர்ந்து தமிழ்நாட்டில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் தற்போது ஆளுங்கட்சியாக இருந்த போதும் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிற்கே சேர்த்துத் தான் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகிறார் என அவர் கூறினார்.

இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.