ETV Bharat / state

போதை மீட்பு மையத்தில் போலீஸ் அடித்துக்கொலை - உறவினர்கள் பகீர் புகார்!

author img

By

Published : Jun 3, 2019, 11:18 PM IST

drug

திருச்சி: போதை மீட்பு மையத்தில் இருந்த காவலர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி கே.கே.நகர், அன்பழகன் தெருவில் லைப் கேர் சென்டர் டிரஸ்ட் சார்பில் போதை மீட்பு மையம் நடத்தப்பட்டுவருகிறது. இந்த மையம் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதை மணிவண்ணன், திவான் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு லிங்க நகரில் ஒரு கிளையும் உள்ளது.

இதன் மூலம் பலர் இங்கு வந்து சிகிச்சைக்காக தங்குவது வழக்கம். இந்த வகையில் 24 பேர் வரை தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இதில், மே 28ஆம் தேதி கடலூர் மாவட்டம் கண்டமங்கலத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (35) என்பவர் தங்கியிருந்தார். இவர் காவல் துறையில் பணியாற்றி பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி தமிழ்ச்செல்வன் இறந்துவிட்டதாக கூறி அவரது உறவினர்களுக்கு போதை மீட்பு மையத்தினர் தகவல் கொடுத்துள்ளனர்.

அலறி அடித்து வந்த உறவினர்கள், உடலை பெற்றுக் கொண்டு இறுதி சடங்குக்கு தயாராகினர். இறுதிச் சடங்குகள் செய்தபோது உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் தொடர்ந்து இறுதிச் சடங்குகளை முடித்து விட்டனர். இந்நிலையில், இன்று அவர்களது உறவினர்கள் காயம் குறித்து கேட்பதற்காக போதை மீட்பு மையத்திற்கு வந்துள்ளனர். அப்போது, போதைக்கு அடிமையானவர்கள் பலர் அங்கு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து கே கே நகர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல்துறையினர் போதை மீட்டு மையத்துக்கு விரைந்துசென்று அங்கிருந்தவர்களை மீட்டு அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தமிழ்ச்செல்வன் அடித்துக்கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதை மீட்பு மையத்தில் போலீஸ்காரர் அடித்துக்கொலை

இதேபோல் கடந்த 20 தினங்களுக்கு முன்பு திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த கண்ணன் (45) என்பவரும் இந்த மையத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் ஐந்து பேர் இதுவரை இந்த மையத்தில் இறந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாத போதை அடிமைகளை அங்கிருப்பவர்கள் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 5 பேரும் இறந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:திருச்சி போதை மீட்பு மையத்தில் போலீஸ்காரர் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.


Body:திருச்சி: திருச்சி போதை மீட்பு மையத்தில் போலீஸ்காரர் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சி கே கே நகர், அன்பழகன் தெருவில் லைப் கேர் சென்டர் டிரஸ்ட் சார்பில் போதை மீட்பு மையம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த மையம் இங்கு செயல்பட்டு வருகிறது. இதை மணிவண்ணன், திவான் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு லிங்க நகரில் ஒரு கிளையும் உள்ளது. இவர்கள் ஆன்லைன் மூலம் போதை மீட்பு மையத்தை விளம்பரம் செய்துள்ளனர். இதன் மூலம் பலர் இங்கு வந்து சிகிச்சைக்காக தங்கியுள்ளனர். இந்த வகையில் இன்று வரை 24 பேர் வரை தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கடந்த 28 ஆம் தேதி கடலூர் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 35) என்பவர் தங்கியிருந்தார். இவர் காவல் துறையில் பணியாற்றி தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி தமிழ்செல்வன் இறந்துவிட்டதாக கூறி அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் வந்து உடலை பெற்றுச் சென்றனர். உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்த போது உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் தொடர்ந்து இறுதிச் சடங்குகளை முடித்து விட்டனர். இந்நிலையில் இன்று அவர்களது உறவினர்கள் காயம் குறித்து கேட்பதற்காக போதை மீட்பு மையத்திற்கு வந்தனர். அப்போது போதைக்கு அடிமையானவர்கள் பலர் அங்கு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை உறவினர்கள் பார்த்தனர். பின்னர் இது குறித்து கே.கே நகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து சென்று அங்கிருந்தவர்களை மீட்டு அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து தமிழ்ச்செல்வனின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த 20 தினங்களுக்கு முன்பு திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த கண்ணன் (45) என்பவரும் இந்த மையத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் ஐந்து பேர் இதுவரை இந்த மையத்தில் இறந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாத போதை அடிமைகளை அங்கிருப்பவர்கள் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 5 பேரும் இறந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Conclusion:போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.