ETV Bharat / state

நாங்களும் பிரச்சார களத்தில் இருப்போம் - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் அதிரடி!

author img

By

Published : Feb 9, 2023, 11:16 AM IST

நாங்கள் பிரச்சாரத்துக்கு நிச்சயமாக செல்வோம் - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்
நாங்கள் பிரச்சாரத்துக்கு நிச்சயமாக செல்வோம் - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு நாங்கள் நிச்சயமாக செல்வோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர் சந்திப்பு

திருச்சி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் பிரிந்துள்ள ஈபிஎஸ் - ஓபிஎஸ் இரு தரப்பிலும் முதலில் தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதனிடையே ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான உத்தரவின்படி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இருப்பினும், ஓபிஎஸ் தரப்பில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால், ஓபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்ட நட்சத்திர தேர்தல் பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்த நிலையில் அதிமுக திருச்சி மாவட்ட ஏர்போர்ட் பகுதிச் செயலாளர் சுமங்கலி சம்பத் இல்லத்தில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம் மற்றும் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுடைய (ஓபிஎஸ் தரப்பு) வேட்பாளர் விலகிவிட்டார். நாங்கள் பிரச்சாரத்திற்கு கண்டிப்பாக போவோம். அந்தந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள், நாங்கள்தான் வெற்றியைப் பெறுவோம் என்று சொல்வது இயற்கை.

வெற்றி பெறுவது நாங்கள்தான். அதன்பின்பு சட்டமன்ற உறுப்பினராக நாங்கள் பதவியேற்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இது முன்னோட்டமாக இருக்கும். வெள்ள நிவாரணத்திற்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என முதலில் அறிக்கை விட்டவர் ஓபிஎஸ்தான். தமிழ்நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு முதல் அறிக்கை ஓபிஎஸ்தான் வெளியிடுகிறார்.

மேலும் இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை மன்றாடி கேட்டுக் கொள்வோம். எம்ஜிஆர் கண்ட சின்னம், ஜெயலலிதா கட்டிக் காத்த சின்னம், 30 ஆண்டுகாலம் ஆட்சிக்கு வந்த சின்னம், அது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” என கூறினார்.

இதையும் படிங்க: பரோட்டா போட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்.. சூடுபிடித்த ஈரோடு கிழக்கு களம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.