ETV Bharat / state

மணப்பாறை அருகே களைகட்டிய ஜல்லிக்கட்டு - ஏராளமான வீரர்கள் பங்கேற்பு

author img

By

Published : Feb 9, 2020, 10:25 PM IST

-trichy
-trichy

திருச்சி: மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த 600 காளைகளை அடக்க 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலயப்பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியை வட்டாட்சியர் தமிழ்கனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளை வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, 600க்கும் மேற்பட்ட காளைகள் வரிசையாக சீறிப்பாய்ந்தன.

மணப்பாறை அருகே களைகட்டிய ஜல்லிக்கட்டு

அவற்றைப்பிடிக்க 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அதில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு மிக்சி, குக்கர், கட்டில், பீரோ, சில்வர் அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. அசம்பாவிதத்தைத் தவிர்க்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தைப்பூச திருவிழா: களைகட்டிய ஜல்லிக்கட்டு

Intro:திருச்சி மணப்பாறை அருகே விறுவிறுப்பாக நடந்துவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த 600 காளைகளை கலந்துகொண்ட 400 மாடுபிடி வீரர்களில் பலர் அடக்கி பரிசுகளைப் பெற்றனர்.Body:திருச்சி:
திருச்சி மணப்பாறை அருகே விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த 600 காளைகளை கலந்துகொண்ட 400 மாடுபிடி வீரர்களில் பலர் அடக்கி பரிசுகளைப் பெற்றனர்.

திருச்சிமாவட்டம். மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை வட்டாட்சியர் தமிழ்கனி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலில் கோவில் காளை வாடி வாசலில் அவிழ்த்து விடப்பட்டது.

தொடர்ந்து திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், 400 மாடுபிடிவீரர்களும் களம்கண்டனர். சுற்றுக்கு 60 மாடுபிடி வீரர்கள் வீதம் களமிறக்கப்பட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறிப்பாய்ந்து காளையர்களிடம் அடங்க மறுத்தம் மாட்டின் உரிமையாளர்களுக்கும், அடங்க மறுத்து துள்ளி குதிக்கும் காளைகளின் திமிலை அடக்கி பிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மிக்சி, குக்கர், காட்டில், பீரோ, சில்வர் அண்டா என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ குழுவினரால் பரிசோதனைக்கு பிறகே ஜல்லிக்கட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு தற்காலிகமாக மைக்கப்பட்ட மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் ஏராளமான ரசிகர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பங்கேற்று ஆர்வமுடன் ரசித்தனர். ஜல்லிக்கட்டிற்க்காக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா வுல் ஹக் மேற்பார்வையில் துணை காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையில் சுமார் 300 கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.