ETV Bharat / state

சாக்லேட் டப்பாவில் மறைத்து தங்கம் கடத்தல்... சுங்கத் துறையிடம் சிக்கிய அவலம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 1:28 PM IST

Updated : Aug 30, 2023, 5:35 PM IST

நூதன முறையில் சாக்லேட் டப்பாவில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம்
நூதன முறையில் சாக்லேட் டப்பாவில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம்

smuggled gold seized in trichy airport: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 149.000 கிராம் எடை உள்ள ரூபாய் 8.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி: சர்வதேச விமான நிலையத்தில் 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 149 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், பாம்புகள் மற்றும் பிற உயிரினங்களை கடத்தி வருவதும், அதிகாரிகள் அதை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

நேற்று மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. விமானத்தில் வரும் பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  • (2/2) The Gold bar was extracted from gold powder ingeniously concealed in two nutella jars by a passenger who arrived from Kuala Lumpur on 28.08.2023. pic.twitter.com/cKs2I51gKY

    — Trichy Customs (Preventive) Commissionerate (@commrprevcustry) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் அதிரடியாக‌ பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.‌ அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த பயணியை சோதனை செய்ததில் அவர் கொண்டு வந்த சாக்லேட் டப்பாவில் மறைத்து தங்கம் கடத்தியது தெரிய வந்தது.

149 கிராம் எடை உள்ள 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தினை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த அந்த பயணிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் எந்த நோக்கத்திற்காக சாக்லேட் டப்பாவில் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்தார் என விசாரணை நடைபெற்று வருகிறது.

அவரது பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு வழக்குகள் ஏதும் இவர் மீது எதுவும் நிலுவையில் உள்ளதா? இவர் எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளார் என அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நூதனமாக சாக்லேட் டப்பாவில் 8.90 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் ‘குருவி’ என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பில் கலெக்டரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!!

Last Updated :Aug 30, 2023, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.