ETV Bharat / state

அதிமுக வேட்பாளர் ரேஸில் உள்ள திருச்சி நிர்வாகி வீட்டில் வெடி வீச்சு!

author img

By

Published : Feb 1, 2021, 9:40 AM IST

திருச்சி: அதிமுக வேட்பாளர் போட்டியில் இடம்பெற்றுள்ள திருச்சி நிர்வாகி வீட்டின் அருகே வெடியை வீசிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் ரேஸில் உள்ள திருச்சி நிர்வாகி வீட்டில் வெடி வீச்சு
அதிமுக வேட்பாளர் ரேஸில் உள்ள திருச்சி நிர்வாகி வீட்டில் வெடி வீச்சு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகிவருகின்றன. தேர்தலில் போட்டியிடுபவர்களிடமிருந்து இன்னும் விருப்ப மனுக்கள் பெறப்படவில்லை. எனினும் தேர்தலில் போட்டியிட அந்தந்தக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் மூலம் முயற்சி செய்துவருகின்றனர்.

இந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப்பேரவைத் (தனி) தொகுதியைப் பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. தற்போது அதிமுகவினர் மத்தியில் கிசுகிசுக்கப்படும் உத்தேசப் பட்டியலில் கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் துறையூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற மைவிழி அன்பரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இந்திராகாந்தி, அறிவழகன் விஜய், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

துறையூர் மலையப்பன் சாலை, மாருதி நகரில் சரோஜா இளங்கோவன் வசித்துவருகிறார். நேற்று (ஜன. 31) மாலை இவரது வீட்டின் அருகே திடீரென தொடர்ச்சியாக வானில் பட்டாசுகள் வெடித்தன. சத்தம் கேட்டு சரோஜா குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று கிடந்தது. அது தொடர்ச்சியாக வானில் சென்று வெடிக்கக்கூடிய 60 ஷாட்களைக் கொண்ட பட்டாசுப் பெட்டி என்பது தெரியவந்தது.

இந்த வெடியை யார் அங்கு கொண்டுவந்து வெடிக்கச் செய்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை. இந்நிலையில் இது குறித்து சரோஜா துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், "அதிமுக முக்கியப் பொறுப்பில் இருக்கும் எனது வீட்டின் அருகே இந்த வெடிபொருள் கடந்துள்ளது. இது எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகார் மனுவை சரோஜா கட்சி லெட்டர் பேடில் எழுதிக் கொடுத்தார். இதை வாங்க மறுத்த காவல் துறையினர் வெள்ளைத் தாளில் எழுதிக் கொடுக்குமாறு கூறினர். இதைத்தொடர்ந்து சரோஜா வெள்ளைத் தாளில் புகார் மனுவை எழுதிக் கொடுத்தார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு 2 ஆப்புகள் தயார்; ஒன்னு சசிகலா... இன்னொன்னு இதுதான்! 'வேல்' ஏந்திய உதயநிதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.