ETV Bharat / state

தமிழில் பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 80% முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

author img

By

Published : Jan 11, 2021, 8:19 AM IST

திருச்சி: தமிழில் பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 80 விழுக்காடு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தமிழில் பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் 80 சதவீதம் முன்னுரிமை
தமிழில் பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் 80 சதவீதம் முன்னுரிமை

தமிழில் பயின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணிகளில் 80 விழுக்காடு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தாய் மொழியில் கல்வி பயின்றவர்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணிகளில் 80 விழுக்காடு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலச் செயற்குழுக் கூட்டம் நேற்று (ஜன. 10) திருச்சியில் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன் தீர்மானங்களை விளக்கி பேசினார்
மாநிலப் பொதுச்செயலாளர் சண்முகநாதன்

இக்கூட்டத்தில், மாநிலப் பொதுச்செயலாளர் சண்முகநாதன் தீர்மானங்களை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள், "போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்துசெய்ய வேண்டும்,

ஆசிரியர், அரசு ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட ஊதியங்கள், ஊதிய உயர்வுகள், சிறப்புநிலை ஊதியம், பதவி உயர்வு போன்றவற்றைத் திரும்ப வழங்க வேண்டும்,

தமிழ்நாட்டில் சாதாரண நிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,

ஆசிரியர், அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய முறையை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் தொடர்ந்து வழங்க வேண்டும்,

தாய்மொழியில் கல்வி பயின்றவர்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணிகளில் 80 விழுக்காடு முன்னுரிமை வழங்க வேண்டும்,

தமிழ்நாட்டில் கல்வி பயிற்று மொழியாக, ஆட்சி அலுவல் மொழியாக, வழக்காடுமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்,

மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலிலிருந்து கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

இந்த 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் 'கோரிக்கை முழக்கப் போராட்டம்' அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பில் திருச்சியில் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி தலைமை அஞ்சலகம் அருகே உள்ள ராணா கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் நெல்சன் தலைமை வகித்தார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சைவராசு வரவேற்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.