ETV Bharat / state

திருப்பூரில் பெண் காவலர் விஷமருந்தி தற்கொலை!

author img

By

Published : May 3, 2019, 11:57 AM IST

திருப்பூர்: நல்லுார் அடுத்த திருநகர் பகுதியில் பெண்காவலர் ஒருவர் வீட்டில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

POLICE SUCIDE

ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராகிமின் மகள் பர்வின் பாவி, 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்துள்ளார். தொடர்ந்து 2018ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வந்தார். இவர் நல்லுார் அடுத்த திருநகர் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (மே 2) பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். பணியை முடித்து மதியம் 2.30 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிய பர்வின் பாவி, இரவு திடீரென வீட்டிலிருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஊராக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருப்பூரில் பெண் போலிஸ் விசமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 

ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் இவரது மகள் பர்வின் பாவி .இவர் 2017 ஆம் ஆண்டு தமிழக போலீசில் சேர்ந்துள்ளார் 2018 ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட போலீசில் பணியாற்றி வருகிறார் .இவர் நல்லூர் அடுத்த திருநகர் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தார் நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் ஓட்டு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் . இந்நிலையில் நேற்று மதியம் 2 30 மணிக்கு பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார் இந்த நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து  மயங்கி விழுந்தார் . உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பெண் போலீஸ் பர்வீன் பாவி பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து ஊரக  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.