ETV Bharat / state

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: மகனை மீட்டுத் தரக்கோரி மனு!

author img

By

Published : Jun 25, 2019, 3:23 PM IST

trippur

திருப்பூர்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக் கூறி, சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு திரும்பி வர முடியாமல் தவிக்கும் தன் மகனை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாரியம்மாள் என்பவர் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் குளத்தூர் புதூர் பகுதியில் வசிப்பவர் மாரியம்மாள். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூர் வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி தனது மூன்று மகன்களையும் வளர்த்து வந்தார். இவரது மூத்த மகன் மணித்துறை, இரண்டாவது மகன் மணிகண்டன் இருவரும் பனியன் நிறுவனங்களிலேயே பணியாற்றி வந்த நிலையில், உடன் பணியாற்றியவர்களின் உதவியுடன் ரஞ்சித் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

இவர் தாய்லாந்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகவும், மாத சம்பளம் ரூ. 40 ஆயிரம் எனவும் ஆசை வார்த்தைக் கூறியுள்ளார். இதனை நம்பிய மாரியம்மாள், தனது இரண்டு மகன்களையும் அனுப்புவதற்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து ரஞ்சித் இருவருக்கும் தாய்லாந்து செல்வதற்கான டிக்கெட், விசா எடுத்து அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு சென்ற இருவருக்கும் ஓட்டலில் வேலை வாங்கித் தந்ததன் மூலம் இருவரையும் சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும், இருவரையும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியே வேலையில் சேர்த்து வைத்துள்ளார். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததுடன் தங்களது தாய் மாரியம்மாளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது குறித்து ரஞ்சித்திடம் கேட்டதற்கு சரிவர பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மணித்துறை
தாய்லாந்தில் மாட்டிக்கொண்ட இளைஞர்

இதனையடுத்து இளைய மகன் மணிகண்டன் தாய்லாந்தில் இருக்க பயந்ததையடுத்து மாரியம்மாள் ரூ. 58 ஆயிரம் செலவழித்து மீண்டும் தமிழ்நாட்டிற்கு அவரை வரவழைத்துள்ளார். மூத்த மகன் அங்கேயே இருந்த நிலையில் அவரது விசா காலம் முடிவடைந்ததால் அவரால் திரும்பி வர முடியாமல் தாய்லாந்திலேயே தங்கியுள்ளார்.

அவரை மீண்டும் வரவழைக்கத் தேவையான தொகையும் தன்னிடம் இல்லாத நிலையில் ரஞ்சித் மீது திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி தனது மகனை ஏமாற்றி அழைத்துச் சென்ற ரஞ்சித் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தனது மகனை மீட்டுத் தரக் கோரியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார்.

மகனை மீட்டுத் தர ஆட்சியரிடம் புகார்
Intro:தாய்லாந்தில் பணிக்குச் சென்ற தனது மகனை ஏமாற்றி சுற்றுலா விசாவில் அனுப்பி வைத்த நபரைக் கைது செய்யக் கோரியும் தாய்லாந்தில் சிக்கியுள்ள தனது மகனை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்ட தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

Body:திருப்பூர் குளத்தூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூர் வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி தனது மூன்று மகன்களையும் வளர்த்து வருகிறார். இவரது மூத்த மகன் மணித்துறை மற்றும் இரண்டாவது மகன் மணிகண்டன் இருவரும் பனியன் நிறுவனங்களிலேயே பணியாற்றி வந்த சூழ்நிலையில் உடன் பணியாற்றிய வந்தவர்களின் உதவியுடன் ரஞ்சித் என்பவரது பழக்கம் கிடைத்துள்ளது இவர் தாய்லாந்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகவும் 40 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் என ஆசை வார்த்தை தெரிவித்துள்ளார் இதனை நம்பிய மாரியம்மாள் தனது இரண்டு மகன்களையும் அனுப்புவதற்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை ரஞ்சித்திடம் கொடுத்துள்ளார் அதனைக் கொண்டு இருவருக்கும் தாய்லாந்து செல்வதற்கான டிக்கெட் மற்றும் விசா எடுத்து அனுப்பி வைத்துள்ளார் அங்கு சென்ற இருவருக்கும் ஓட்டலில் வேலை வாங்கித் தந்தது உடன் இருவருக்கும் சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது மேலும் இருவரையும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியே வேலையில் சேர்த்து வைத்துள்ளார் இதனால் தங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததுடன் தங்களது தாய் மாரியம்மாளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து ரஞ்சித்திடம் கேட்டதற்கு சரிவர பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார் இதனை அடுத்து இளைய மகன் மணிகண்டன் தாய்லாந்தில் இருக்க பயந்ததையடுத்து 58 ஆயிரம் ரூபாய் செலவழித்து மீண்டும் தமிழகத்திற்கு தனது இளைய மகனை வரவழைத்துள்ளார் மாரியம்மாள் மூத்த மகன் அங்கேயே இருந்த சூழ்நிலையில் அவரது வீசா காலம் முடிவடைந்த உடன் அங்கு பணி செய்வதற்கு உண்டான அனுமதியும் அவரிடம் இல்லாது போகவே அவரால் திரும்பி வர முடியாமல் தாய்லாந்து லேயே தங்கியுள்ளார் அவரை மீண்டும் வரவழைக்க தேவையான தொகையும் தன்னிடம் இல்லாத சூழ்நிலையில் ரஞ்சித் மீது திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தனது மகனை ஏமாற்றி அழைத்துச் சென்ற ரஞ்சித் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தனது மகனை மீட்டுத் தரக் கோரியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார்.

பேட்டி மாரியம்மாள்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.