ETV Bharat / state

‘சிலரது திருட்டு புத்தி காரணமாக இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது’ நீதிபதி கிருபாகரன்!

author img

By

Published : Feb 27, 2021, 8:54 PM IST

இயற்கை வளம் குறித்து பேசிய நீதிபதி கிருபாகரன்
இயற்கை வளம் குறித்து பேசிய நீதிபதி கிருபாகரன்

திருப்பூர்: தமிழ்நாட்டில் அலுவலர்கள் சிலரின் திருட்டு புத்தி காரணமாக, இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக சூழலியல் அறிக்கை வெளியீட்டு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விமர்சித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட வனப்பகுதிகளில் திருப்பூர் என்ற அமைப்பு சார்பாக, ஆறு வருடமாக 10 லட்சத்து 50 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இதன் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவும், சூழலியல் ஆய்வறிக்கை வெளியீட்டு விழாவும், திருப்பூர் தாராபுரம் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பின்னலாடை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் பசுமையைப் பாதுகாப்பதிலும், திருப்பூர் முக்கியப் பங்காற்றி வருகிறது. இதனை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்.

இயற்கை வளம் குறித்து பேசிய நீதிபதி கிருபாகரன்

தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் பெற்றுக் கொண்டிருக்கிற சூழல் நிலவுகிறது. தற்போது ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அதனை வாங்க மறுத்து விடுங்கள். ஓட்டுக்கு பணம் பெற்று விட்டால் அதுவே அரசியல்வாதிகளுக்கும், அலுவலர்களுக்கும் தவறை மறைக்க ஒரு காரணமாக அமைந்துவிடும்.

தமிழ்நாட்டில் உள்ள சில அலுவலர்களின் திருட்டு புத்தி காரணமாக, கேரளாவிற்கு, தமிழகத்திலிருந்து ஆற்று மணல் கடத்தப்பட்டு வருகிறது. அங்கிருந்து மெடிக்கல் வேஸ்ட் தமிழ்நாடு கொண்டு வரப்படுகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் மனதால் மாறவேண்டும், வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்து, இயற்கையை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: எரிந்த நிலையில் பறந்து வந்த பாராசூட்டுகள்: தீப்பிடித்த தென்னை மரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.