ETV Bharat / state

கேத்தாண்டப்பட்டியிலுள்ள கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்

author img

By

Published : Jan 4, 2021, 5:02 PM IST

Start of sugarcane crushing at the Co-operative Sugar Mill in Kethandapatti
கேத்தாண்டப்பட்டியிலுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையின் நடப்புப் பருவத்திற்கான கரும்பு அரவையை இன்று மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையின் நடப்புப் பருவத்திற்கான கரும்பு அரவையை இன்று மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீரமணி, "திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ஆம்பூர், ஆரணி, போளூர் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 65 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் கரும்பு ஆலையில் பதிவுசெய்த விவசாயிகளுக்குப் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டுவருவதாகவும், அதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கேத்தாண்டப்பட்டியிலுள்ள கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்

கடந்தாண்டு திருப்பத்தூர் பகுதியில், வறட்சியின் காரணமாக கூட்டுறவுச் சர்க்கரை ஆலை இயங்காமல் இருந்ததாக குறிப்பிட்ட அவர், ஆலை இயங்க தமிழ்நாடு அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளை எடுத்ததாகவும், கரும்பு நடவு அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: 'தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவரும் அதிமுக அரசு!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.