ETV Bharat / state

இலவச சேலை வாங்க கூட்டம்.. நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

author img

By

Published : Feb 4, 2023, 8:17 PM IST

Updated : Feb 4, 2023, 9:44 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வழங்குவதற்கான நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி

திருப்பத்தூர்: வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அய்யப்பன் என்பவர் நாளை (ஜன.5) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்காக, இன்று (ஜன.4) காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகில் டோக்கன் விநியோகித்தார்.

அதை வாங்குவதற்காக 500க்கும் மேற்பட்ட பெண்கள் கூடினர். அப்போது, ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ஏராளமான பெண்கள் படுகாயமடைந்தனர். அதில், வள்ளியம்மாள் (60) , ராஜாத்தி (62), நாகம்மாள் (60), மல்லிகா (70) ஆகிய நான்கு பெண்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்த பெண்கள்
உயிரிழந்த பெண்கள்

மேலும், மூன்று பெண்கள் காயமுற்று, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குக் காரணமான அய்யப்பன் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டாட்சியர் சம்பத், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்

இந்நிகழ்வு குறித்து, திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் மாரிமுத்து மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து பேட்டியளித்தனர். வாணியம்பாடியில் நடந்த இந்நிகழ்வு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஐயப்பனிடம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தனர்.

மேலும் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஏ.வ.வேலு சார்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 25 ஆயிரம் என 1 லட்சம் ரூபாயை வழங்கப்பட்டது. இதனையறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், இது குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN #TNDIPR @cmotamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/WUgRXSe7jo

    — TN DIPR (@TNDIPRNEWS) February 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வயதான நான்கு பெண்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா இரண்டு லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கூட்ட நெரிசலில் சிக்கி இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் பலி

Last Updated : Feb 4, 2023, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.