ETV Bharat / state

'கலெக்டரையே தண்ணீர்விடச் சொல்லுங்க' - அலுவலரின் பொறுப்பற்ற பேச்சும், பொங்கியெழுந்த பொதுமக்களும்!

author img

By

Published : Aug 18, 2020, 1:08 PM IST

பொதுமக்கள் சாலை மறியல்!
பொதுமக்கள் சாலை மபொதுமக்கள் சாலை மறியல்!றியல்!

திருப்பத்தூர்: ஏழு மாத காலமாக குடிநீர் முறையாக வழங்காத அதிருப்தியில் மருத்துவப் பணிக்குச் செல்பவர்களைக்கூட தடுத்து நிறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கதிரமங்கலம் பஞ்சாயத்துக்குள்பட்ட பகுதியில் ஏழு மாதங்களாக அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் வரவில்லை. இதற்காகக் காத்திருந்து சோர்ந்துபோன அப்பகுதி மக்கள் திருப்பத்தூரிலிருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் இன்று (ஆக.18) மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூரிலிருந்து புதுப்பேட்டை செல்லும் வழியில் கதிரமங்கலம் பஞ்சாயத்துக்குள்பட்ட சிகே ஆசிரமம் அருகில் காந்திபுரம் என்ற பகுதி உள்ளது.

இந்தப் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு கடந்த ஏழு மாதங்களாக குடிநீர் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த அதிருப்தியில் அப்பகுதியினர் இன்று வெற்றுக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், “இது சம்பந்தமாக நாங்கள் எழுத்தர் வெங்கடாஜலபதியிடம் பலமுறை முறையிட்டோம். அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளீர்கள். அவரையே தண்ணீர்விடச் சொல்லுங்கள் எனப் பதிலளித்தார்.

அது மட்டுமில்லாமல் ஆப்பரேட்டர் ஆறுமுகம் ஆழ்துளை கிணறு அருகே குழாயை வைத்து பணம் வாங்கிக்கொண்டு குடிநீர் விநியோகம் செய்கிறார். அதே தண்ணீரை எங்கள் பகுதிக்குள் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிக்கு ஏற்றிவிடச் சொன்னால் முடியாது என்கிறார். எங்களது தேவைகளைப் பூர்த்தி-செய்துகொள்ள அலுவலர்களின் கவன ஈர்ப்பைப் பெறவே இந்தச் சாலை மறியலில் ஈடுபடுகின்றோம்” என்றனர்.

இது தொடர்பாக, தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் ராணி, திட்ட இயக்குநர் மகேஷ் பாபு சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். மேலும், இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாகத் தீர்த்துவைக்கிறோம் என்று உத்தரவாதம் அளித்தனர்.

இதன் பெயரில் மக்கள் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மருத்துவப் பணிக்குச் செல்பவர்கள்கூட சாலையைக் கடக்க முடியாமல் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குடிநீர் பிரச்னை; 2ஆவது நாளாக பொதுமக்கள் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.