ETV Bharat / state

கள்ளக்குறிச்சி பள்ளியை மூடக்கோரி 17 ஆண்டுகளுக்கு முன் போராட்டம் - முத்தரசன்

author img

By

Published : Jul 21, 2022, 10:26 AM IST

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை மூடக்கோரி 17 ஆண்டுகளுக்கு முன்பே போராட்டம் நடத்தியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீமதி போல் பல பேர் அப்பள்ளியில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் - முத்தரசன்
ஸ்ரீமதி போல் பல பேர் அப்பள்ளியில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் - முத்தரசன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் 23வது மாநாடு நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், 2005ஆம் ஆண்டு சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு அப்பள்ளியில் என்னென்ன சம்பவம் நடந்துள்ளது, எத்தனை பேர் இறந்தார்கள், இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகிறது என்பது குறித்து பட்டியலிட்டு துண்டுப்பிரசுரம் வழங்கினோம். பள்ளியின் அனுமதி ரத்து செய்ய வேண்டும் என்றும், பள்ளியை அரசே நடத்த வேண்டும் என்று சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினோம்.

அப்போது நடைபெற்ற போராட்டம் தற்போது சரி என்று நிரூபணமாகி உள்ளது. இந்தப் பள்ளியில் ஒரு ஸ்ரீமதி மட்டுமல்ல, பல பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் தொடர்ச்சியாக கொலைகள் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீமதி போல் பல பேர் அப்பள்ளியில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் - முத்தரசன்

இதனை பள்ளி நிர்வாகம் மறைக்க நினைக்கிறது. இருந்தபோதிலும் அங்கு நடைபெற்ற வன்முறையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது.

இருப்பினும் காவல்துறை சற்று விழிப்புணர்வுடன் இருந்திருக்க வேண்டும். தூத்துக்குடி போல் துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை. இதனால் பெருமைப்படுகிறேன். இருப்பினும் உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: சிறுமியை கர்ப்பமாக்கிய 13 வயது சிறுவன் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.