ETV Bharat / state

கடமை தவறிய போலீஸ் டிஸ்மிஸ்.. ஒரு சில நாட்களில் ஓய்வு பெற இருந்த காவலர் சஸ்பெண்ட்! - Irregular activities by police

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 10:46 PM IST

Action against police man: அந்தியூர் பகுதியில் லஞ்சம் வாங்குதல் உள்ளிட்ட தொடர் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு வந்த காவலரை நிரந்தர பணி நீக்கம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையம்
காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு/ திருநெல்வேலி: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பூமாலை என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2009ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார்

அதைத் தொடர்ந்து, ஈரோடு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றிய போது ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை அவரது மனைவி கண்டித்து வந்துள்ளார், ஆனால் அவர் ஆன்லைன் சூதாட்டத்தை கைவிட மறுக்கவே, மனமுடைந்த அவரது மனைவி, குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பான புகார் எழுந்த நிலையில், பூமலை அந்தியூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அந்தியூரில் பணியாற்றிய போது, கடைகளில் தீபாவளி நேரத்தில் மாமூல் வசூல் செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்த சிசிடிவி ஆதாரங்களுடன் கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, பூமாலை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நம்பியூர் காவல் நிலையத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பூமாலை தொடர் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு வந்தது உறுதியாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று பணியில் இருந்த பூமாலையை நிரந்தர பணிநீக்கம் செய்ய காவல்துறை தலைவர் உத்தரவிட்டதையடுத்து, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர், பூமாலையை நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதேபோல், நெல்லை பாளையங்கோட்டை அடுத்த பெருமாள்புரம் காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் விஜயகுமார். இவர் வழக்கு ஒன்றில் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்ததையடுத்து, அது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையில், ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலையத்தில் தற்போது ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் மீது துறை ரீதியாக நடைபெற்ற விசாரணையில், அவர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று விஜயகுமாரை தற்காலிக பணி நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

வரும் மே.31 ஆம் தேதி காவல் ஆய்வாளர் விஜயகுமார் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ”போக்குவரத்து - காவல் இரு துறைகளுக்கு சமூக பொறுப்பு மிக மிக முக்கியம்” - சிஐடியு தலைவர்! - Police Conductor Issue Video

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.