ETV Bharat / state

மர்ம நபர்கள் தீ வைத்ததால் பற்றி எரியும் நேக்னாமலை

author img

By

Published : Mar 24, 2020, 10:54 PM IST

திருப்பத்துார்: வாணியம்பாடி அருகே மர்ம நபர்கள் வைத்த தீயால் எரியும் நேக்னாமலையை வனத்துறையினர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

திருப்பத்துாரில் உள்ள வாணியம்பாடி அருகே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ளது நேக்னாமலை. இம்மலையை மர்ம நபர்கள் தீ வைத்ததால் கொழுந்து விட்டு எரிகிறது. இந்தத் தீயால் பல்லாயிரக்கணக்கான மரங்கள், மயில்கள், முயல்கள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் அழியும் சூழுல் ஏற்பட்டுள்ளது.

மர்ம நபர்கள் தீ வைத்ததால் பற்றி எரியும் நேக்னாமலை

மேலும் இம்மலையில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் சோ்ந்து வாழ்ந்து வரும் நிலையில் மலை உச்சியில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைக்காக கிழே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மலை உச்சிக்கு செல்ல வளையாம்பட்டு, செக்குமேடு உள்ளிட்ட கிராமங்கள் வழியாகச் செல்லும் பாதைகள் அனைத்தும் தீப்பற்றி எரிவதால் வனத்துறையினர், வருவாய்த் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: மலைப்பாதையில் பயணித்த 9 பேர் காட்டுத்தீயில் சிக்கிய பரிதாபம்; இருவர் உயிரிழப்பு, தேடுதல் வேட்டையில் தீயணைப்புத் துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.