ETV Bharat / state

‘மகளிர் உரிமை தொகையை ஸ்டாலின் தான் தருகிறார் என சொல்லுங்கள்’ - பணியாளர்களுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுரை!

author img

By

Published : Jul 29, 2023, 10:42 PM IST

Etv Bharat
Etv Bharat

மகளிர் உரிமை தொகை படிவம் பூர்த்தி செய்யும் போது முதலமைச்சர் ஸ்டாலின் தான் பணம் கொடுக்கிறார் என்பதை ஒவ்வொருவருக்கும் சொல்லி கொடுங்கள் என பணியாளர்களுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுரை கூறினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஏ.வ.வேலு

திருப்பத்தூர்: ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப படிவம் பெறும் முகாமினை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.

அப்போது விண்ணப்பம் படிவம் பூர்த்தி செய்யும் பணியாளர்களிடம், ”மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் பெறும் பெண்களுக்கு, இது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழங்கும் பணம் என்பதை ஒவ்வொருவருக்கும் சொல்லி சொல்லி கொடுங்கள் முதலமைச்சர் பெயரை சொல்வதில் தப்பில்லை” என தெரிவித்தார்.

மேலும் பொதுமக்களிடையே பேசிய அவர், ”அரசாங்க அதிகாரி குடும்பத்தினரோ அல்லது அரசியல்வாதி குடும்பத்தினரோ இந்த உரிமை தொகையை பெற முடியாது. தகுதியுடைய பாமர மக்கள் பயன் பெறவே இந்த மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. அதனை ஆய்வு செய்யவே நான் இங்கு வந்துள்ளேன்” என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் விழாவில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்கிற திட்டத்தை நிறைவேற்றுவோம் என குறிப்பிட்டார். அந்த வகையில் எல்லாம் முறையாக தகுதியுள்ளவர்களுக்கு மனுக்கள் சேர்ந்துள்ளதா? அதில் முறையாக பதிவு செய்கிறார்களா, என தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் பணிகளை செய்கின்றார்களா என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் தான் நான் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் பகுதியில் பெரியாங்குப்பம் பகுதியிலும் வாணியம்பாடி தேவஸ்தானம் பகுதியிலும், ஜோலார்பேட்டை வக்காணப்பட்டி பகுதியிலும் திருப்பத்தூர் மாடப்பள்ளி ஆகிய நான்கு இடங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றேன்.

மாவட்ட நிர்வாகத்தினர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்த வரை 567 நியாய விலைக்கடைகளும் 3 லட்சத்து 31 ஆயிரத்து 381 குடும்ப அட்டைகள் உள்ளன. மாவட்டத்தில் 280 இடங்களில் முகாம்கள் அமைத்து அரசாங்கத்தின் சார்பாக 2 கட்டங்களாக மகளிர் உரிமை தொகை வழங்க முகாம்கள் நடைப்பெறும். திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று வரை 96 ஆயிரத்து 46 விண்ணபங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு கட்ட முகாம்களில் பணம் கிடைக்கப் பெறாதவர்கள் மேல்முறையீடு என்ற முறையில் உரிய ஆவணங்களுடன் அந்தந்த கோட்டாச்சியர் அலுவலகத்தில் மனு அளித்தால் அவர்களுக்கும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உரிமை தொகை வழங்க முயற்சிகள் செய்யப்படும். ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டையை மையமாக கொண்டு தான் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தாயை தேடிச்சென்ற 4 வயது சிறுவன்: பண்ணைக் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.