ETV Bharat / state

மருத்துவ குணம் கொண்ட கழுதை பால்; ஓரு லிட்டர் 5 ஆயிரம் ரூபாய்!

author img

By

Published : Apr 9, 2023, 8:26 PM IST

கழுதை பால் விற்பனை ஒரு சங்கு பால் ரூ 70க்கும் ஒரு லிட்டர் பால் ரூ.5000க்கும் விற்பனை
கழுதை பால் விற்பனை ஒரு சங்கு பால் ரூ 70க்கும் ஒரு லிட்டர் பால் ரூ.5000க்கும் விற்பனை

கோவில்பட்டியில் கழுதை பால் விற்பனையில் ஒரு சங்கு பால் ரூ 70க்கும் ஒரு லிட்டர் பால் ரூ.5000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி: கோவில்பட்டி பகுதியில் கழுதை பால் விற்பனை ஜோரூராக நடைபெற்று வருகிறது. கழுதை பாலில் மருத்துவக்குணம் இருப்பதாக பொது மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர். ஒரு சங்கு பால் ரூபாய் 70க்கும், ஒரு லிட்டர் பால் ரூபாய் 5000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கழுதை பால் குடிப்பதால் இருமல் மற்றும் சளித்தொல்லை நீங்கி ஜீரணம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகாரிக்கின்றது. மேலும் கழுதை பால் மருத்துவ குணம் கொண்டது என்பதனால் மக்களின் நம்பிக்கைக்கு உட்பட்டதாகவும் உள்ளது. கிராமங்களில் கழுதை பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கழுதை பால் விற்பனை ஜோரூராக நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி ஜோதி நகர், ஸ்டாலின் காலனி, சுப்பிரமணியபுரம், பாரதி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கழுதை பால் விற்கப்படுகின்றது. விருத்தச்சலம் பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரது தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் 10 கழுதைகளை வைத்து கழுதை பால் விற்பனை செய்து வருகின்றனர்.

ஒரு சங்கு கழுதை பால் 70 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் கழுதை பால் ரூபாய் 500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கழுதை முடியினால் செய்யப்பட்ட தாயத்தும் தலா ஒன்றுக்கு 70 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கழுதையிடம் மூச்சு பிடிக்கவும் 70 ரூபாய் வசூல் செய்கின்றனர். குழந்தைகள் உடலுக்கு நல்லது என்று கூறி பொது மக்கள் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளுக்கு கழுதை பால் வாங்கி கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈஸ்டர் பண்டிகை - தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் தத்துரூப நிகழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.