தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல் வடமேற்கு திசையில் 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆம்பன் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 670 கி.மீ. தொலைவிலும், புவனேஸ்வரிலிருந்து தெற்கே 1,160 கி.மீ. திசையில் உள்ளது.
இது தற்போது வடமேற்கு திசையில் 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவாகி உள்ளதால் நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிதாக உருவான அம்பன் புயல்!