ETV Bharat / state

விவசாயி தோட்டத்தில் பால் நிறத்தில் வரும் தண்ணீர்: பஞ்சத்திற்கான அறிகுறியா? விவசாயி அச்சம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 3:02 PM IST

விவசாயி தோட்டத்தில் பால் நிறத்தில் வரும் தண்ணீர்
தூத்துக்குடி அருகே விவசாயி தோட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து பால் வரும் அதிசயம்: பஞ்சத்திற்கான அறிகுறியா? விவசாயி அச்சம்

Milk in Bore well water: தூத்துக்குடி அருகே விவசாயத்துக்காக போடப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து பால் போன்ற நிறத்தில் தண்ணீர் வருவதை கண்டு மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

விவசாயி தோட்டத்தில் பால் நிறத்தில் வரும் தண்ணீர்

தூத்துக்குடி: சேரகுளம் அருகே உள்ள தீராத்திகுளத்தில் விவசாயத்துக்காக போடப்பட்ட ஆழ்துளை கிணற்று நீர் பால் போன்று காட்சியளிப்பதால் வறட்சிக்கான அறிகுறியாக இருக்கலாம் என விவசாயி அச்சத்தில் உள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவருக்கு சேரகுளம் அருகே உள்ள தீராத்திகுளத்தில் சொந்தமான கிணறு மற்றும் தோட்டம் உள்ளது.

இந்த கிணற்று பாசனம் மூலம் வாழை, தென்னை மற்றும் பருத்தி விவசாயம் செய்து வருகிறார். இதற்காக இரண்டு ஆழ்துளை போர்கள் அமைத்து அதில் வரும் தண்ணீரை கிணற்றில் விட்டு, அதன் பின் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து தோட்டத்துக்கு பாய்ச்சி வருகிறார்.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பருவமழை முறையாக பெய்யாத காரணத்தினால் தற்போது தென்னை மற்றும் பருத்தி ஆகியவற்றை பயிரிட்டுள்ளார். இவர் தினமும் தோட்டத்திற்கு சென்று தண்ணீர் இறைத்து பாய்ச்சுவது வழக்கம். தற்போது மழை இல்லாத காரணத்தினால் கிணற்றில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது.

இதையும் படிங்க: சிந்தாரிப்பேட்டை வழியாக 140 பேருந்துகள்.. 7 மாதங்கள் மின்சார ரயில் சேவை ரத்தால் எம்டிசி ஏற்பாடு!

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கிணற்றிற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அதற்காக இரண்டு ஆழ்துளை போரையும் போட்டுள்ளார். அப்போது அதில் ஒரு ஆழ்துளை போரில் இருந்து வரும் தண்ணீர் பால் போல் வெள்ளை நிறத்தில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பால்பாண்டி அருகில் உள்ள மற்றொரு போர் தண்ணீரை பார்த்துள்ளார்.

ஆனால் அந்த போரில் வந்த தண்ணீர் சாதாரணமாக வந்துள்ளது. மேலும் சந்தேகமடைந்த பால்பாண்டி அருகில் இருந்த மற்றொரு விவசாயியின் போரை பார்த்துள்ளார். அங்கு தண்ணீர் சரியாக வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஒரு வார காலமாக ஒரு போர் தண்ணீர் மட்டும் பால் நிறத்தில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தண்ணீர் கிணற்றில் விழுந்து கிணற்று தண்ணீர் அனைத்தும் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது.

விவசாயப்பகுதி என்பதால் அங்கு ஏராளமான மயில்கள் உள்ளன. அந்த மயில்கள் இந்த கிணற்று அருகில் உள்ள தொட்டில் கிடக்கும் தண்ணீரை குடிக்கும். தற்போது கிணற்று தண்ணீர் நிறம் மாறியுள்ளதால், அதிர்ச்சி அடைந்த விவசாயி பால்பாண்டி தொட்டியில் தண்ணீர் நிரப்ப அச்சப்படுகிறார்.

இதுகுறித்து விவசாயி பால்பாண்டி கூறுகையில், “கடந்த வருடமும் இதே போல் இரண்டு நாட்கள் இந்த போரில் இதே போல் பால் நிறத்தில் தண்ணீர் வந்தது. அதன் பின்னர் முறையாக மழை பெய்யவில்லை. இந்த வருடமும் அதே போல் தண்ணீர் நிறம் மாறியுள்ளது. எனவே இது வறட்சிக்கான அறிகுறியாக இருக்கும் என்று அச்சப்பட வைக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனே ஆய்வு செய்ய வேண்டும்”, என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: Onam Festival : விழாக் கோலம் பூண்ட தோவாளை பூ மார்க்கெட்.. விடிய விடிய குவிந்த பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.