ETV Bharat / state

ஓசியில் மாமன்னன் படம் பார்த்த அமைச்சர் ஆதரவாளர்கள்… தட்டிகேட்ட போலீசாரை தரக்குறைவாக பேசி ரகளை!!

author img

By

Published : Jul 3, 2023, 2:58 PM IST

அமைச்சர் கீதா ஜீவன் ஆதரவாளர்கள் ஓசி டிக்கெட்டில் மாமன்னன் திரைப்படம் பார்க்க வந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர் ஊழியர்கள் மற்றும் தட்டிகேட்ட போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

தூத்துக்குடி: பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் 'மாமன்னன்' என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஓசியில் மாமன்னன் படம் பார்த்த அமைச்சர் ஆதரவாளர்கள்… தட்டிகேட்ட போலீசாரை தரக்குறைவாக பேசி ரகளை!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக தமிழ்நாட்டிலும், அரசியல் களத்திலும் நிகழும் அடக்குமுறைகளை இப்படம் தோலுரித்துக் காட்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருப்பதால் திமுகவினர் ஏராளமானோர் இப்படத்தை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்தை தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கில் நேற்று (ஜூலை 2) மாலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், திமுக மகளிர் அணியினர் 220க்கும் மேற்பட்டோருடன் மாலை 6.30 மணி காட்சியை பார்த்து கண்டு ரசித்தனர்.

இதனை தொடர்ந்து, மாமன்னன் திரைப்படத்தினை இரவு 10.15 மணிக்கு திமுக நிர்வாகிகள் சிலர் அதே திரையரங்கில் பார்வையிட சென்றனர். ஆனால் சிலருக்கு மட்டுமே டிக்கெட் எடுத்து விட்டு ஏராளமானோர் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், சிலர் மது அருந்தி விட்டு திரையங்கிற்குள் வந்து தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக கேட்டு திரையரங்கு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் திரையரங்கிற்குள் வந்து விசாரணை செய்து ரகளையில் ஈடுபட்ட திமுகவினரை கண்டித்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் மனைவியை கழுத்து நெரித்துக்கொலை செய்த கணவர் கைது!

ஆனால் அங்கு இருந்த திமுகவினர் போலீசாரிடமும் வாக்குவாதம் செய்ததோடு மட்டுமல்லாமல் போலீசாரை தரக்குறைவாக பேசி புகார் அளித்த திரையரங்கின் உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்ததால் திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாமன்னன் பார்க்க திரையரங்கு குடும்பத்துடன் வந்த ரசிகர்கள் படம் பார்க்க முடியாமல் திமுகவினர் செய்த ரகளை கண்டு திரையரங்கில் இருந்து பாதியில் வெளியேறினர்.

தூத்துக்கு மாநகராட்சி மேயராக இருக்ககூடிய ஜெகன் பெரியசாமிக்கு சொந்தமாக பெரிசன் பிளாசா திரையரங்கில் மாமன்னன் திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் அமைச்சர் கீதாஜீவனுக்கும், மேயர் ஜெகன் பெரியசாமிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மேயர் ஜெகன் பெரியசாமிக்கு சொந்தமான திரையரங்கில் படம் பார்க்காமல் திமுக இளைஞரணி, மகளிர் அணியினரை அழைத்து வந்து அமைச்சர் பாலகிருஷ்ணா திரையரங்கில் வந்து மாமன்னன் படம் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மெர்க்கன்டைல் வங்கி செயல்பட எவ்வித சிக்கலும் இல்லை: தேசியப் பங்குச் சந்தைக்கு நிர்வாகம் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.