ETV Bharat / state

கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்!

author img

By

Published : Jan 4, 2020, 11:49 PM IST

in thoothukudi bullock cart race conducted on Veerapandiya Kattabomman 261st birthday
கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்!

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே வீரபாண்டிய கட்டபொம்மனின் 261ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 261ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கிளிலிருந்து வந்த 24 மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்துகொண்டன.

சிங்கிலிபட்டி பிள்ளையார்நத்தம் சாலையில் மாட்டுவண்டி போட்டி நடத்தப்பட்டது. 12 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சின்ன மாட்டுவண்டி பிரிவில் 12 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில் சிங்கிலிபட்டியைச் சேர்ந்த முருகபாண்டி மாட்டு வண்டி முதல் இடத்தினையும், அதே ஊரைச் சேர்ந்த விக்கிரவாண்டி அய்யனார் வண்டி 2ஆவது இடத்தினையும், பூலாங்கல்லைச் சேர்ந்த முகமது வண்டி 3ஆவது இடத்தினையும் பிடித்தன.

இதேபோன்று 10 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பூஞ்சிட்டு மாட்டு வண்டி பிரிவில் 12 மாட்டு வண்டிகள் பங்கேற்றதில் முதல் பரிசினை சிங்கிலிபட்டி சேர்ந்த ஆனந்த் மாட்டு வண்டியும் இரண்டாம் பரிசினை ஆதனூரைச் சேர்ந்த ராஜமோகித் மாட்டு வண்டியும் மூன்றாம் பரிசினை சிங்கிலிபட்டியைச் சேர்ந்த விக்ரபாண்டி அய்யனார் மாட்டு வண்டியும் பெற்றது. மாட்டுவண்டி போட்டியைக் காண விளாத்திகுளம், அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையோரம் நின்று கண்டுகளித்தனர்.

கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்!

இதையும் படியுங்க: காங்கேயம் மாட்டு பால் பண்ணை அமைக்க கோரிக்கை!

Intro:கோவில்பட்டி அருகே வீரபாண்டிய கட்டபொம்மனின் 261வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
Body:கோவில்பட்டி அருகே வீரபாண்டிய கட்டபொம்மனின் 261வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் சிங்கிலிபட்டி கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 261வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி,ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கிளல் இருந்து 24 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் சிங்கிலிபட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 261 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சின்ன மாடு பூஞ்சிட்டு என இரண்டு வகையான மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெற்றது இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி,ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கிளல் இருந்து 24 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சிங்கிலிபட்டி பிள்ளையார்நத்தம் சாலையில் மாட்டுவண்டி போட்டி நடத்தப்பட்டது 12 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சின்ன மாட்டுவண்டி பிரிவில் 12 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில் சிங்கிலிபட்டியை சேர்;நத முருகபாண்டி மாட்டு வண்டி முதல் இடத்தினையும், அதே ஊரைச்சேர்ந்த விக்கிரவாண்டி அய்யனார் வண்டி 2வது இடத்தினையும், பூலாங்கல்லை சேர்ந்த முகமது வண்டி 3வது இடத்தினையும் பிடித்தன.இதேபோன்று 10 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பூஞ்சிட்டு மாட்டு வண்டி பிரிவில் 12 மாட்டு வண்டிகள் பங்கேற்றதில் முதல் பரிசினை சிங்கிலிபட்டி சேர்ந்த ஆனந்த் மாட்டு வண்டியும் இரண்டாம் பரிசினை ஆதனூரைச் சேர்ந்த ராஜமோகித் மாட்டு வண்டியும் மூன்றாம் பரிசினை சிங்கிலிபட்டியைச் சேர்ந்த விக்ரபாண்டி அய்யனார் மாட்டு வண்டியும் பெற்றது.மாட்டுவண்டி போட்டியை காண விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையோரம் நின்று மாட்டுவண்டிப் போட்டி கண்டுகளித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.