ETV Bharat / state

கோயில் பூட்டை உடைத்து உண்டியலை அலேக்காக தூக்கிச் சென்ற திருடர்கள்

author img

By

Published : Feb 5, 2020, 9:30 AM IST

தூத்துக்குடி: கோவில்பட்டியில் அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை திருடிச் சென்ற சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kovilpatti kovil hundial theft
kovilpatti kovil hundial theft

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புதுக்கிராமம் கோபாலபுரம் தெருவில் ஸ்ரீ காந்தாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பூசாரியாக இருப்பவர் புதுக்கிராமத்தைச் சேர்ந்த சுடலைமுத்து.

இவர் இன்று காலையில் வழக்கம்போல கோயிலுக்குப் பூஜை செய்ய சென்றபோது கோயிலின் உள்புறக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த சுமார் இரண்டு அடி உயர சில்வர் உண்டியல் மாயாமாகியிருப்பது தெரிவந்தது.

திருடு நடைபெற்ற கோயில்

திருடு போன உண்டியலில் சுமார் ரூ. ஆறு ஆயிரம் முதல் எட்டு ஆயிரம் வரை பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்நேரமும் போக்குவரத்து அதிகமாகச் செல்லும் பிரதான சாலையில் உள்ள கோயிலில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் பக்கதர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 'திட்டம் இரண்டு.. பலன் ஒன்று...' - இது பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான பிளான்

Intro:கோவில்பட்டியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள்
Body:கோவில்பட்டியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் கோபாலபுரம் தெருவில் ஸ்ரீ காந்தாரி அம்மன் திருக்கோவிலில் மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் கோபாலபுரம் தெருவில் ஸ்ரீ காந்தாரி அம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக இருப்பவர் புதுக்கிராமத்தைச் சேர்ந்த சுடலைமுத்து. இவர் இன்று காலையில் வழக்கம் போல கோவிலுக்கு பூஜை செய்யச் சென்றபோது கோவிலில் உள்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் உள்ளே இருந்த சுமார் இரண்டடி சில்வர் உண்டியல் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. மேலும் கோவிலின் கருவறை பகுதியிலும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் கருவறையில் இருந்த எந்த பொருட்களும் திருடு போகவில்லை என்றும், உண்டியலில் சுமார் ரூ6000 முதல் 8000 வரை பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள மெயின் சாலையில் இருக்கும் கோவிலில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.