ETV Bharat / state

அனுமதியின்றி துப்பாக்கி எடுத்து சென்ற ஹரி நாடாரிடம் விசாரணை!

author img

By

Published : Mar 26, 2019, 2:42 PM IST

Updated : Mar 26, 2019, 3:23 PM IST

ஹரி நாடார்

தூத்துக்குடி: அனுமதியின்றி துப்பாக்கி எடுத்து வந்ததாக நாடார் மக்கள் சக்தி இயக்க தலைவர் ஹரி நாடார் மற்றும் அவருடைய ஆதரவாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறைந்த நாடார் சமூக தலைவர் கராத்தே செல்வின் நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்காக தூத்துக்குடி வந்த நாடார் மக்கள் சக்தி இயக்க தலைவர் ஹரி நாடார், விமான நிலையத்திலிருந்து நெல்லை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். விமான நிலையத்தை அடுத்து உள்ள சுங்கச்சாவடி பகுதியில் தாசில்தார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் அவரது காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது அவருடன் வந்திருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நரேந்திர சிங் யாதவிடம் ஒரு துப்பாக்கியும் 36 தோட்டாக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அனுமதியின்றி துப்பாக்கி எடுத்து வந்ததாக நாடார் மக்கள் சக்தி இயக்க தலைவர் ஹரி நாடார் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை புதுக்கோட்டை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.




நாடார் சமூகத்தைச் சேர்ந்த மறைந்த தலைவரான கராத்தே செல்வின் நினைவு நாள் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது இதில் கலந்து கொள்வதற்காக நாடார் மக்கள் சக்தி இயக்க தலைவரான ஹரி நாடார் இன்று காலை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். அவரை அழைத்துச் செல்வதற்காக அவருடைய ஆதரவாளர்கள் 8 பேர்  வந்திருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் கார் மூலமாக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தனர். விமான நிலையத்தை அடுத்து உள்ள சுங்கச்சாவடி பகுதியில் தாசில்தார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் ஹரி நாடாரின் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது அவருடன் வந்திருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நரேந்திர சிங் யாதவிடம் ஒரு துப்பாக்கியும் 36 தோட்டாக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அனுமதியின்றி துப்பாக்கி எடுத்து வந்ததாக நாடார் மக்கள் சக்தி இயக்க தலைவர் ஹரி நாடார் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை புதுக்கோட்டை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Photo FTP
Last Updated :Mar 26, 2019, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.