ETV Bharat / state

ஜூன் மாதம் பள்ளி திறப்பை ஒட்டி, தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு!

author img

By

Published : May 13, 2023, 4:10 PM IST

ஜூன் மாதம் பள்ளி திறப்பை ஒட்டி ஆட்சியர் தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு!
ஜூன் மாதம் பள்ளி திறப்பை ஒட்டி ஆட்சியர் தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு!

தூத்துக்குடியில் ஜூன் மாதம் பள்ளி திறப்பையொட்டி பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் கோடைகால விடுமுறைக்குப் பின் ஜூன் மாதம் வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்பபடும். இந்த நிலையில், தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பள்ளி பேருந்துகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதில், பள்ளிப் பேருந்துகளில் வேக கட்டுப்பாடு கருவி, கண்காணிப்பு கேமரா, அவசர வழி உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பள்ளிப் பேருந்துகளில் மாணவ, மாணவிகளை பாதுகாப்பான முறையில் அழைத்து வரவும், மாணவர்கள் பேருந்துகளில் ஏறிய பின்பு தான் பேருந்து இயக்க வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளை ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு எடுத்துரைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ஒவ்வொரு கல்வி ஆண்டும் தொடங்குவதற்கு முன்னர் பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்து வழக்கம். அதைப்போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பேருந்துகளை ஆய்வு செய்து வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர், சார் ஆட்சியர், கோட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் பேருந்துகளை ஆய்வு செய்து வருகிறோம். தூத்துக்குடி மாநகரில் 169, திருச்செந்தூரில் 200, கோவில்பட்டியில் 269 இந்த வாகனங்கள் கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வு நடைபெறுகிறது.

இந்த ஆய்வில், குறிப்பாக பள்ளி வாகனங்களில் உள்ள படிகள், அவசர வழி, சிசிடிவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதா மேலும், வாகன ஒலி எழுப்புதல், முதலுதவிப் பெட்டிகள் போன்றவை சரியாக இருக்கின்றனவா? என ஆய்வு மேற்கொண்டு ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.

மேலும் தொடர்ந்து பேருந்துகளை கண்காணித்து வருகிறோம். இந்த ஆய்வில், குறிப்பாக பள்ளி வாகனங்களில் உள்ள படிகள், அவசர வழி, சிசிடிவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதா மேலும், வாகன ஒலி எழுப்புதல், முதலுதவி பெட்டிகள் போன்றவை சரியாக இருக்கின்றனவா? என ஆய்வு மேற்கொண்டு ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். மேலும் தொடர்ந்து பேருந்துகளை கண்காணித்து வருகிறோம்’’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: திருமண ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டு; தவறை தட்டிக்கேட்டதால் இளைஞர் வெறிச்செயல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.