ETV Bharat / state

பிரதமரின் சுதந்திர தின பேச்சுக்கு டி.ராஜா கண்டனம்!

author img

By

Published : Aug 15, 2019, 5:05 PM IST

தூத்துக்குடி: பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின விழா உரைக்கு இந்திய கம்யூனிஸட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் சுதந்திர தின பேச்சுக்கு டி.ராஜா கண்டனம்!

தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸட் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் இரண்டாவது நாளான இன்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா மாநாட்டு அரங்கத்தின் நுழைவு வாயிலில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் அக்கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன், நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மூவர்ண தேசிய கொடியை ஏற்றிய டி.ராஜா

பின்னர் டி.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த 370ஆவது சட்டப்பிரிவு சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் அகற்றியுள்ளது. அதனை யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளது ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும், அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும்’ என்றார்.

பிரதமரின் சுதந்திர தின பேச்சுக்கு டி.ராஜா கண்டனம்!

மேலும் பேசிய அவர், மோடி அரசு விவசாயிகளுக்கு மட்டுமல்ல தொழிலாளர்களுக்கும் விரோதமாது என்றும், பெரும் முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசாக இது உள்ளது எனவும் கடுமையாக விமர்சித்தார்.

Intro:சுதந்திர தின விழாவில் விவசாயிகள் மகிழ்சி கடலில் இருப்பதாக பிரதமர் பேச்சு - இந்திய கம்யூனிஸட் கட்சி தேசிய செயலாளர் ராஜா தூத்துக்குடியில் கண்டனம்Body:

தூத்துக்குடி

சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி விவசாயிகள் மகிழ்சி கடலில் திளைப்பதாக பேசியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸட் கட்சி தேசிய செயலாளர் ராஜா மோடி அரசு விவசாயிகள் மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும் எதிராக செயல்படுகின்றது என்று குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடியில் மூன்று நாட்கள் நடைபெறும் அக்கட்சியின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸட் கட்சி தேசிய செயலாளர் ராஜா, மாநாட்டு அரங்கத்தின் நுழைவுவாயிலில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த 370 ஆவது சட்டப்பிரிவு அகற்றி உள்ளது. அதனை யூனியன் பிரதேசமாக அறிவித்து உள்ளது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய தாக்குதலாகும், அரசியல் சாசனத்திற்கு எதிரானது ஆகும் என்றார். இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தின் படி அந்த மாநில மக்களின் கருத்துக்களையும் அந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்காமல் எடுக்கப்பட்டிருக்க முடிவு சரியானது அல்ல என்று கூறினார். நாட்டில் ஒற்றுமை பாதுகாக்கப்படவேண்டும் நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி வந்துவிட்டது என்று யாரும் கருத முடியாது மக்கள் அங்கு கொந்தளித்த போது இவர் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என குறிப்பிட்ட அவர் தாம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சென்றபோது கைது செய்யப்பட்டதையும் அப்போது சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற தேர்தலின்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்திய போது அதனை ஏற்றுக் கொள்ளாத அரசு தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்போது தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறினார். பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையில் விவசாயம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் சரித்து வரும் பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற அவர், சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி விவசாயிகள் மகிழ்சி கடலில் திளைப்பதாக பேசி உள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி அரசு விவசாயிகளுக்கு மட்டுமல்ல தொழிலாளர்களுக்கும் விரோதமான அரசு என்றும் பெரும் முதலாளிகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசாக செயல்படுகின்றது என்று குற்றம் சாட்டிய அவர் தமிழ்நாட்டில் எடப்பாடி அரசு கையாளாக அரசாகவும் மத்திய அரசின் எடுபிடி அரசாகவும் செயல்படுகின்றது என்ற அவர் தமிழக அரசு மீது மக்களுக்கு உள்ள கொந்தளிப்பினைதான் தான் பாராளுமன்ற தேர்தலில் காட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

முன்னதாக மாநாட்டு அரங்கத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்த அக்காட்சியை அக்கொடியை அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஏற்றி வைத்தார் நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி ; D.ராஜா - இந்திய கம்யூனிஸட் கட்சி தேசிய செயலாளர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.