ETV Bharat / state

முதியோர் இல்லத்தில் சமத்துவ பொங்கல்

author img

By

Published : Jan 11, 2020, 3:01 PM IST

college student celebrate the pongal in old age home  தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்  சமத்துவப் பொங்கல்  முதியோர் இல்லத்தில் பொங்கல் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்  மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி உறுப்புக்கல்லூரி மாணவர்கள்
முதியர் இல்லத்தில் சமத்துவப்பொங்கலைக் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

தூத்துக்குடி: மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி உறுப்புக் கல்லூரி மாணவ, மாணவிகள் அக்கல்லூரியின் அருகேயுள்ள முதியோர் இல்லத்தில் சமத்துவப் பொங்கலைக் கொண்டாடினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி உறுப்புக் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் அக்கல்லூரியின் அருகேயுள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.

இந்த முதியோர் இல்லத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட முதியவர்களுடன் மாணவ - மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவம் குறித்த மாணவர்களின் நாடகமும், மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சியும், சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

முதியர் இல்லத்தில் சமத்துவப்பொங்கலைக் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மாணவர்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடிய அனுபவம் குறித்து பாடல்கள் பாடினர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு தமிழர்கள் பண்பாட்டில் பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டது.

இதையும் படிங்க: நீலகிரியில் ஹெத்தை அம்மன் திருவிழா கோலாகலம்!

Intro:கோவில்பட்டி அருகே முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடிய அரசு கல்லூரி மாணவர்கள்
Body:கோவில்பட்டி அருகே முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடிய அரசு கல்லூரி மாணவர்கள்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி உறுப்பு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அங்குள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விழாவில் மாணவிகளின் சிலம்பாட்டத்துடன், முதியோர்களும் பாடல்கள் பாடி அசத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி உறுப்பு கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்லூரி அருகே இருக்கும் தேனம்மாள் முதியோர் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முதியோர் இல்லத்தில் உள்ள 50க்கு மேற்பட்ட முதியவர்களுடன் மாணவ மாணவிகள் இணைந்து ஜாதிமத பேதமின்றி பொங்கல் வைத்து அன்பை பரிமாரிக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களின் நாடகமும் மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மாணவர்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடிய அனுபவம் பற்றி பேசி பாடல்கள் பாடினர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு தமிழர்கள் பண்பாட்டில் பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டது.விழாவில் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.