ETV Bharat / state

"கால்கள், நாக்கு இருக்காது" அமைச்சர் கீதா ஜீவனுக்கு சசிகலா புஷ்பா வார்னிங்!

author img

By

Published : Dec 22, 2022, 10:38 AM IST

Updated : Dec 22, 2022, 11:37 AM IST

தூத்துக்குடி பொது கூட்டத்தில் அண்ணாமலை குறித்து அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுக்கு, 'நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, பேசிய நாக்கு இருக்காது' என பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பா மிரட்டல் விடுத்துள்ளார்.

பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பா
பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பா

பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பாவின் பேச்சு

தூத்துக்குடி: பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா, மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 1,000 ஏழை எளிய கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பெண்களுக்குத் தையல் மெஷின், மற்றும் சேலைகளை வழங்கினர்.

மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில், சிறப்பு அழைப்பாளராகச் சிறுபான்மை அணி செயலாளர் அசோகன், பாஜக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், சட்ட மன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பால கணபதி, ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பின்னர் தூத்துக்குடியில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அண்ணாமலை குறித்துப் பேசியதற்குப் பதிலடி அளித்த பேசிய சசிகலா புஷ்பா ”ஒன்றரை வருடம் திமுக ஆட்சியில் ஒன்றும் கிழிக்கவில்லை. சுய புராணம் பாட தகுதி உள்ளவர் அண்ணாமலை ஆகவே, அவரை புகழ்கிறோம்.

முழு தகுதி பெற்றவர் அவர், பாஜக தலைவர் அண்ணாமலை எந்த கோர்ட் வாசலிலும் சொத்து குவிப்பு வழக்குக்கு நிற்கவில்லை. குற்றவாளிகளைக் கொண்டு போய் நின்று தான் பழக்கம், குற்றவாளியாய் நின்று அவருக்குப் பழக்கம் இல்லை. 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும், மக்களுக்காக உழைக்கும் அவரை பற்றி பேச தகுதி இல்லை.

மரியாதையாகப் பேச சொல்லிக் கொடுத்தது பாஜக, ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவிற்கு இல்லை. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்குப் பின் அண்ணாமலைக்குத் தான் ஆங்காங்கே மக்கள் கூட்டம் நிற்கிறது. சனாதனம் பற்றி பேசுவோம் அது எங்கள் கொள்கை. தேர்தல் வாக்குறுதியான மக்களுக்கு 1,000 ரூபாய், கல்வி கடன் ரத்து போன்றவை ஏமாற்று வேலை.

’அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம்’ என்கிறார் அமைச்சர் கீதாஜீவன். ஏறிப்பாருங்கள் நீங்கள் வீட்டிலிருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, பேசிய நாக்கு இருக்காது” என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “நீங்கள் செய்யும் ஊழலைப் பற்றி சொல்லுவோம், சமூக நலத்துறை அமைச்சராய் இருந்து சமூகத்தைப் பேணவில்லை. நாகரிக அரசியல் செய்ய வேண்டும். தெற்கத்தி பெண்களுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். தூத்துக்குடியில் மாற்றம் வர போகிறது. கீதாஜீவன் அமைச்சராக இருக்கும் போது இங்கு திமுக தோற்கப் போகிறது. பாஜக வெற்றி பெற போகிறது” என்றார்.

இதையும் படிங்க: "திமுகவுக்கு தைரியமிருந்தால் தொட்டுப்பாருங்க" - நாராயணன் திருப்பதி சவால்!

Last Updated : Dec 22, 2022, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.