ETV Bharat / state

"திமுகவுக்கு தைரியமிருந்தால் தொட்டுப்பாருங்க" - நாராயணன் திருப்பதி சவால்!

author img

By

Published : Dec 19, 2022, 4:53 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியதோடு, கொலை மிரட்டல் எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர் கீதா ஜீவனை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையே மோதல் போக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமேடை, செய்தியாளர்கள் சந்திப்பு என அமைச்சர் செந்தில் பாலாஜி, கீதா ஜீவன் உள்ளிட்டோர் அண்ணாமலையை குறிவைத்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க சமூக வலைத்தளங்களிலும் திமுக - பாஜக தொண்டர்கள் பரஸ்பரம் விமர்சனம் செய்துக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் திமுகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் "தமிழகத்தின் அமைச்சர் கீதா ஜீவன் பொது கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியதோடு, "சூடு, சொரணை இருந்தால், என் தலைவர் குறித்தும், ஒவ்வொரு அமைச்சர் குறித்தும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையேல் நீ பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறுவோம்" என்று மிரட்டல் விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிகார மமதையில் ஒரு அமைச்சர், அரசியல் கட்சி தலைவர் ஒருவரை மேடையில் ஏறி தாக்குவோம் என்று கூறியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து கொண்டிருப்பதற்கு காரணம் ஆளும் கட்சியும், அமைச்சர்களும் தான் என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஏற்கனவே, சில அமைச்சர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் அண்ணாமலை அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததை கண்டு கொள்ளாத தமிழக அரசு மற்றும் காவல்துறை, பெண் அமைச்சரின் இந்த பேச்சுக்கும் கை கட்டி, வாய் பொத்தி மௌனம் காப்பது முறையல்ல. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அமைச்சர் கீதா ஜீவன் அவர்களே, கடமை தவறி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் தொனியில் பேசியுள்ள நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

  • தமிழகத்தின் அமைச்சர் @geethajeevandmk பொது கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் @annamalai_k அவர்களை ஒருமையிவ் பேசியதோடு, "சூடு, சொரணை இருந்தால், என் தலைவர் குறித்தும், ஒவ்வொரு அமைச்சர் குறித்தும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையேல் நீ பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறுவோம்"(1/6)

    — Narayanan Thirupathy (@narayanantbjp) December 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், பொது வெளியில் பொறுப்புள்ள கட்சி தலைவர் ஒருவரை மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட வேண்டும் இல்லையேல், சவால் விடுகிறேன், அவர் எந்த இடத்தில் அண்ணாமலை அவர்களை மிரட்டினாரோ, நான் அதே இடத்தில் தமிழக பாஜக நடத்தும் கூட்டத்தில், தமிழக அமைச்சர்களின் ஊழல் விவகாரங்கள், முறைகேடுகள் குறித்தும், திமுகவின் அராஜகம் குறித்தும் மக்களிடையே எடுத்து சொல்கிறேன். அமைச்சர் கீதா ஜீவன் கூறிய அதே வார்தைகளின் படி, திமுகவினருக்கு சூடு, சொரணை இருந்தால், தைரியம் இருந்தால் மேடையில் ஏறி பார்க்கட்டும். திமுக ஆண்டு கொண்டிருப்பது தமிழக மாநிலத்தை. ஆனால், பாஜக ஆள்வது இந்திய நாட்டை என்பதை திமுகவினர் மறந்து விட வேண்டாம்" என்று எச்சரிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கார் கண்ணாடி உடைப்பு... மாஜி அமைச்சர் கண்முன்னே வேட்பாளரை கடத்திய கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.