2 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த உதயநிதி

author img

By

Published : Nov 21, 2022, 9:36 PM IST

2 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் தொடக்கம் - உதயநிதி ஸ்டாலின்
2 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் தொடக்கம் - உதயநிதி ஸ்டாலின் ()

ஸ்ரீவைகுண்டம் அணையில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டம் 2021-22இன்கீழ் தாமிரபரணி மற்றும் வைகை ஆற்றில் 10 லட்சம் நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்வதற்காக தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் 27 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனை செயல்படுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் நிகழ்வினை அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், கடல் கூண்டுகளில் 40% மானியத்தின் மூலம் கடல் மீன் வளர்ப்பு மேற்கொள்ள எட்டு மீனவர்களுக்கு பணியாணையும், மீன் விற்பனை செய்வதற்கு குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனத்திற்கு 40% மானிய உதவியில் இரண்டாம் கட்ட மானியமாக நான்கு லட்சத்திற்கான செயல்முறை ஆணை மீன் விற்பனையாளர் ஹென்றி-க்கு வழங்கப்பட்டது.

2 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த உதயநிதி

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் திமுக-வினர் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: உதயநிதியை வரவேற்க வந்த தொண்டர்கள் இடையே வாக்குவாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.