ETV Bharat / state

சிறுமிக்குப் பாலியல் வன்புணர்வு: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

author img

By

Published : Jun 28, 2021, 2:03 PM IST

நன்னிலத்தில் சிறுமிக்குப் பாலியல் வன்புணர்வு கொடுத்ததாக இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

thiruvarur youngster arrested in pocso  sexual harassment  youth arrested in pocso act because of sexual harassment  thiruvarur youth arrested in pocso  pocso act  thiruvarur news  thiruvarur latest news  crime news  குற்றச் செய்திகள்  சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  திருவாரூர் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது  போக்சோ சட்டம்  திருவாரூர் செய்திகள்  திருவாரூர் நன்னிலம் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு
போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன்...

திருவாரூர்: நன்னிலம் பூந்தோட்டம், வள்ளுவர் நகரைச் சேர்ந்த தமிழரசன் (28), அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் காதலிப்பதாக ஏமாற்றி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அந்தச் சிறுமியிடம் மது போதையில் தகராறு செய்வதும்; பாலியல் வன்புணர்வு செய்வதும் போன்ற துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பாய்ந்த போக்சோ சட்டம்

இதனைக்கண்ட சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் தமிழரசனிடம் விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர், அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை’ - மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.