ETV Bharat / state

காவல்துறையினரை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Oct 22, 2020, 2:39 PM IST

ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட  இந்திய மாணவர் சங்கத்தினர்
ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர்

திருவாரூர் : விஜய் சேதுபதியின் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யாத காவல் துறையினரை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர், விஜய் சேதுபதி ரசிகர் மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர், விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் இணைந்து விஜய் சேதுபதியின் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யாத காவல் துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளம் மூலமாக கொலை மிரட்டல் விடுத்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், விஜய் சேதுபதியின் குடும்பத்திற்கு உடனடியாக தமிழ்நாடு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: கட்சிக்கொடி ஏற்றுவதில் மோதல்: திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட 602 பேர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.