ETV Bharat / state

காவு வாங்க காத்திருக்கும் தொட்டி: புதிய தொட்டி அமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

author img

By

Published : Jan 3, 2021, 2:51 PM IST

சாயும் நிலையில் இருக்கும் குடிநீர் தேக்க தொட்டி அல்லது காவு வாங்க காத்திருக்கும் தொட்டி: புதிய தொட்டி அமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
சாயும் நிலையில் இருக்கும் குடிநீர் தேக்க தொட்டி அல்லது காவு வாங்க காத்திருக்கும் தொட்டி: புதிய தொட்டி அமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் பள்ளி வளாகத்தில், எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி புதிய தொட்டி அமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த பள்ளியின் வளாகத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கிராம மக்களுக்காக குடிநீர் தேக்க தொட்டி கட்டி கொடுக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது குடிநீர் தொட்டியின் நான்கு தூண்கள் முழுவதும் காரைகள் முழுவதும் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. மேலும், குடிநீர் தேக்க தொட்டி பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளதால் குழந்தைகள் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, இடிந்து விழுந்தால் மாணவ மாணவிகளுக்கு உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாலும், தொட்டியின் அருகில் குடியிருப்புகள் இருப்பதாலும், குடியிருப்புகள் மீது விழுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்துடன் இரவுகளை கழித்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

சாயும் நிலையில் இருக்கும் குடிநீர் தேக்க தொட்டி

இது குறித்து ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நீர் தேக்க தொட்டி இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பதற்கு முன்பே மாவட்ட நிர்வாகத்தினர் கவனத்தில் கொண்டு புதிய குடிநீர் தேக்க தொட்டி அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...’அதிமுக தொண்டர்களிடமிருந்து திமுகவை ஸ்டாலின் காப்பாற்றட்டும்’ : முதலமைச்சர் பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.