கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

author img

By

Published : Dec 7, 2021, 7:22 PM IST

மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவாரூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருவாரூர்: வடபாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வடபாதிமங்கலத்தில் உள்ள வீர மாரியம்மன் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "திருவாரூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் ஊராட்சி உச்சிவாடி கிராமத்தில் அமைந்துள்ள வீர மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது.

மாரியம்மன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு
மாரியம்மன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு

அந்த இடத்தில் அரசாங்கத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு கம்பி வேலிகள் அமைத்துப் பாதுகாக்கப்பட்ட வந்தது.

இதனைப் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் 50 க்கும் மேற்பட்டோர் வந்து கம்பி வேலிகளை அகற்றிவிட்டு, அங்கு வைக்கப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தையும் வெட்டி கடைகளில் விற்பனை செய்து விட்டுச் சென்றுள்ளனர்.

இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே இந்த கோயில் நிலங்களை மீட்டுத் தர மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினர்.

இதையும் படிங்க: சரவணா ஸ்டோர் குழும சோதனை; ரூ.1,230 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.