திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றது.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை லஞ்ச பணமாக சார் பதிவாளர் அலுவலர்களிடம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், லஞ்சம் பெற்ற அலுவலரையை கையும் களவுமாக பிடித்தனர்.
இதில் லஞ்சம் பெற்ற அலுவலரிடமிருந்து ரூ.40 ஆயிரத்து 600 ரொக்கப்பணம், ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்ற சோதனையால் மன்னார்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க...எழுவர் விடுதலை, தமிழர்களின் உணர்வு சார்ந்தது - அமைச்சர் ஜெயகுமார்!