ETV Bharat / state

மூன்று நாள்களாக மது இல்லை; விரக்தியில் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு!

author img

By

Published : Jul 22, 2023, 6:21 PM IST

Updated : Jul 22, 2023, 6:46 PM IST

Etv Bharat கொலை மிரட்டல் மனநலம் குன்றியவர்
Etv Bharat கொலை மிரட்டல் மனநலம் குன்றியவர்

திருவாரூரில் மூன்று நாள்களாக குடிக்காமல், சைவ உணவு சாப்பிடலாம் இருந்த விரக்தியில், பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய மனநலம் குன்றியவரை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மூன்று நாள்களாக மது இல்லை; விரக்தியில் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டம், சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்தவர், சிவசங்கரன் (35). திருமணமான இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர் அங்குள்ள இனிப்பகத்தில் பணியாற்றி வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரை நல்வழிப்படுத்த, அவரது மாமியார் சந்திரா மற்றும் நான்கு உறவுக்கார பெண்களுடன் கடந்த 19ஆம் தேதி புதன்கிழமை மேல்மருவத்தூர் கோயிலுக்குச் சென்று, அங்கு தங்கி மூன்று நாள்கள் சேவை செய்துவிட்டு ஊர் திரும்பும் வழியில் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தனர்.

அப்போது, மன்னார்குடி பேருந்திற்காக காத்திருக்கும்போது, மூன்று நாள்களாக குடியின்றி இருந்ததாலும், மாமிசம் இல்லாத உணவு என்பதாலும் சரியான உணவு சாப்பிடாத நிலையில், சரியான தூக்கமும் இன்றி இருந்த சிவசங்கரன், திடீரென ஆவேசமான நிலையில், பேருந்து நிலையத்தில் இருந்து சாலையில் தப்பியோடி, பழைய பேருந்து நிலையத்தை தாண்டி ஏகாம்பரேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள சந்திற்குள் ஓடியுள்ளார். அங்கு திறந்திருந்த ஒரு கூரை வீட்டிற்குள் புகுந்த சிவசங்கரன், வீட்டில் இருந்தபடி இட்லி வணிகம் செய்யும் முத்து (55) என்பவரை அங்கிருந்த அரிவாள்மனை கொண்டு தோள்பட்டையில் வெட்டினார்.

தொடர்ந்து, கையில் அரிவாள்மனை வைத்துக்கொண்டு கோயிலின் பின்புறமாக கோயிலுக்குள் ஏறி கோயில் ராஜகோபுரத்தில் பதுங்கி கொண்டு தன்னை பிடிக்க வந்தால், தாக்குவேன் என மிரட்டி வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து கோயில் முன்பு, நூற்றுக்கணக்கானோர் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் திரண்டு விட்டனர். உடனடியாக அவரை பிடிக்க முயற்சிக்காமல், காவல் துறையினருக்குத் தகவல் தந்தனர். அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் தர, அவர்களும் வந்து கோபுரத்தின் மற்றொரு புறம் ஏறி அவரை பின்பக்கமாக வந்து லாவகமாக பிடித்தனர்.

பின்னர், அவரை கீழே இறக்கிக் கொண்டு வந்து, பொதுமக்கள் அவரை தாக்காதபடி பாதுகாத்து, மேற்கு காவல் நிலையம் கொண்டு வந்தனர். அங்கு வந்து அவரது குடும்பத்தினரிடம் மேற்கு காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே காயமுற்ற முத்து, கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

குடிபழக்கத்திற்கு அடிமையானவரை திருத்த கோயிலுக்குச் சென்று, அங்கு தங்கி பக்தர்களுக்கு சேவை செய்து விட்டு வீடு திரும்பும்போது குடிக்காத நிலையில், தூக்கம் இல்லாத நிலையில், சரியாக சைவ உணவை சாப்பிடாத நிலையில் ஏற்பட்ட ஆவேசத்தால், மனநிலை பாதிக்கப்பட்டவரை போல சிவசங்கரன் நடந்து கொண்டார் என உறவினர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Sathuranga Vettai பாணியில் டிரேடிங் மூலம் லாபம் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி!

Last Updated :Jul 22, 2023, 6:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.