ETV Bharat / state

Viral - சூலாயுதத்துடன் பக்தர்களுக்கு காட்சி தரும் அன்னபூரணி அரசு - அவ்வப்போது எட்டிப்பார்க்கும் சந்திரமுகி!

author img

By

Published : Apr 20, 2023, 7:12 PM IST

திருவண்ணாமலையில், தன்னை கடவுள் போல் பாவித்து சூலாயுதத்துடன் பக்தர்களுக்கு காட்சி தரும் பெண் சாமியார் அன்னபூரணி அரசுவை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது அன்னபூரணி அரசுவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Etv Bharat சூலாயுதத்துடன் பக்தர்களுக்கு காட்சி தரும் அன்னபூரணி
Etv Bharat சூலாயுதத்துடன் பக்தர்களுக்கு காட்சி தரும் அன்னபூரணி

சூலாயுதத்துடன் பக்தர்களுக்கு காட்சி தரும் அன்னபூரணி

திருவண்ணாமலை: கீழ்ப்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் என்ற பெயரில் குடிசை அமைத்துக்கொண்டு தன்னை கடவுள் போல் பாவித்து அன்னபூரணி அரசி என்னும் பெண், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு மட்டும் காட்சி தரும் அபூர்வ நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இங்கு ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் அன்னபூரணி அரசை பார்க்க வருகின்றனர். அன்னபூரணி அரசு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒவ்வொரு அவதார ரூபங்களில் முழு மேக்கப்புடன் காட்சி தந்து, மக்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாக நம்பி பொதுமக்கள் அவரை காண வருகின்றனர்.

மேலும், யூ-ட்யூபில் பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி, 'ஆன்மீக தீட்சை' கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அன்னபூரணி அரசை தரிசித்து ஆசிர்வாதம் பெறும் மக்களுக்கு தீராத நோய், வாழ்வாதார பிரச்னை, திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை, தீய பழக்கங்களுக்கு அடிமை இப்படிப்பட்ட பல குறைகளில் இருந்து பக்தர்களைக் காத்து வாழ்வை ஆனந்தமாக வாழ வழி செய்தும் வருகிறாராம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜாதோப்பு பகுதியில் உள்ள ஆசிரமம் என்ற பெயரில் குடிசை அமைத்து தன்னை கடவுள் போல் பாவித்து முழு மேக்கப்புடனும் மற்றும் நகை அலங்காரத்துடன் கையில் சூலாயுதம் ஏந்தி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். பக்தர்கள் பெண் சாமியாரின் காலில் விழுந்து வணங்கி உண்மையான கடவுளுக்கு, தீப ஆராதனைகள் செய்வதுபோல் தீப ஆராதனை செய்து, வழிபட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தன்னைக் கடவுள் போல் பாவித்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நேரத்தில் பெண் சாமியாரின் உள்ளே இருக்கும் சந்திரமுகி அவ்வப்போது வெளியே வரும் நிகழ்வும் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. நாட்டில் பல்வேறு சாமியார்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இன்னல்கள் தெரிந்தும் இது போன்ற போலி சாமியார்களை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தாஜ்மஹாலை பின்னுக்குத் தள்ளிய மாமல்லபுரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.