கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருவதையடுத்து இன்று முதல் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மருத்தவப் பரிசோதனையை கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் தெரிவிக்கையில், "கோயிலில் உள்ள அனைத்து இடங்களிலும் நோய் பரவாமல் இருக்க கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களைப் பரிசோதனை செய்து அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களை நிர்வாகத்தினர் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
மேலும், இன்று மலோசியாவில் இருந்து வந்த 18 நபர்கள் கொண்ட குழுவினரை கோயில் ஊழியர்கள் மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்று மருத்துவக் குழு தெரிவித்தது.
கோயிலுக்கு வரும் வெளிநாட்டவர்கள் தங்களுக்கு நோய்த் தொற்று இல்லை என்று விமான நிலையத்தில் அளிக்கப்படும் கடிதத்தைக் காண்பித்தால் மட்டுமே கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா பீதி : வெறிச்சோடி கிடக்கும் சுற்றுலாத் தளங்கள்!