ETV Bharat / state

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கு கண்டனம்... பள்ளிக் கல்வித் துறையை கண்டித்து பெற்றோர் தர்ணா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 11:01 AM IST

ரணி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்..கல்வி துறையை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
கஸ்தம்பாடி கிராம மக்கள் போராட்டம்

ஆரணி அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரணி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்..கல்வி துறையை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

திருவண்ணாமலை: ஆரணி அடுத்த கஸ்தம்பாடி கிராம ஊராட்சி ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து, பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கஸ்தம்பாடி ஊராட்சி ஆரம்ப பள்ளி 1945 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சரவணன் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். மேலும், இப்பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கஸ்தம்பாடி ஊராட்சி ஆரம்ப பள்ளி மாவட்ட அளவில் கற்பித்தல், ஒழுக்கம், மாணவர்கள் வருகை பதிவேடு ஆகியவற்றில் சிறப்பு பெற்று, மாவட்ட ஆட்சியர் மூலமாக சிறப்புப் பள்ளி என்று பெயர் பெற்றுள்ளது. மேலும், இப்பள்ளியில் ஆங்கில வழிக் கற்றல் கற்பிக்கப்பட்டு மாணவர்கள் பெரிதும் பயனடைந்து வருவதால் பெற்றோர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: "என் தலைக்கு ரூ.10 கோடியா... பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே என் தலையை சீவிக் கொள்வேன்" - உதயநிதி ஸ்டாலின்!

அதனைத்தொடர்ந்து, கஸ்தம்பாடி கிராமத்தில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் பயிலும் மாணவர்களை பெற்றோர்கள் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் சேர்த்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால், தனியார் நர்சரி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிப்படைந்த தனியார் பள்ளி உரிமையாளர்கள், அரசியல்வாதிகளின் ஆதரவோடு கஸ்தம்பாடி ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணனை பணியிட மாற்றம் செய்து வேறொரு பள்ளிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்த கல்வித் துறையை கண்டித்து, பள்ளி மேலாண்மை குழு, கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் ஒருங்கிணைந்து பள்ளியின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பணியிட மாற்றம் செய்த தலைமை ஆசிரியர் சரவணனை மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்த கோரிக்கையும் வைத்தனர். மேலும், போராட்டத்தில், கல்வித்துறை தலைமை ஆசிரியர் சரவணனை மீண்டும் பள்ளியில் பணி அமர்த்தவில்லை என்றால் பள்ளியில் படிக்கும் 140 மாணவ, மாணவிகளின் பள்ளிச் சான்றிதழைகளை ஒட்டுமொத்தமாக பெற்றுக்கொண்டு வேறு அரசு பள்ளியில் சேர்ப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கஸ்தம்பாடி ஊராட்சி ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் தொடர்பாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள நடத்திய போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: Sanatanam issue: "சனாதன கருத்தியலுக்கு தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்"- அமைச்சர் அன்பில் மகேஷ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.