ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலின் 9ஆம் நாள் நவராத்திரி விழா - அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி

author img

By

Published : Oct 5, 2022, 10:12 AM IST

அம்மனின் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அண்ணாமலையார் கோயிலின் 9ஆம் நாள் நவராத்திரி விழா
அம்மனின் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அண்ணாமலையார் கோயிலின் 9ஆம் நாள் நவராத்திரி விழா

அண்ணாமலையார் ஆலயத்தின் ஒன்பதாம் நாள் நவராத்திரி விழாவில், அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று (அக் 4), கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஷோடச உபச்சாரம் என்று அழைக்கப்படுகின்ற 16 வகை தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஓதுவார் மூர்த்திகள் அம்பாள் பாடல்கள் பாடியும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: வெகு விமரிசையாக நடைபெற்ற அண்ணாமலையார் கோயிலின் 8ஆம் நாள் நவராத்திரி விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.