ETV Bharat / state

சாத்தனூர் அணையில் செத்து மிதந்த மீன்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி!

author img

By

Published : May 4, 2019, 4:22 AM IST

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செத்து மிதக்கும் ஆயிரகணக்கான மீன்கள்

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூரில் உள்ள அணை சுற்றுலாத் தலமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

fish die
செத்து மிதக்கும் மீன்களை காட்டும் பொதுமக்கள்

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "செங்கம் சாத்தனூர் அணையில் கடந்த இரு தினங்களாக மீன்கள் திடீரென இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இது எங்களுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. மீன்கள் இறப்பிற்கான காரணத்தை அரசு அலுவலர்கள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

fish die
கரையோரம் ஒதுங்கியுள்ள மீன்கள்
Intro:சாத்தனூர் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி.


Body:சாத்தனூர் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை சுற்றுலாத்தலமாகவும் குடிநீருக்கான ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

செங்கம் சாத்தனூர் அணை தென்பெண்ணை ஆற்றில் கடந்த இரு தினங்களாக மீன்கள் திடீரென இறந்து கரை ஒதுங்கி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

சாத்தனூர் அணையில் உள்ள ஏராளமான மீன்கள் திடீரென இறந்து தண்ணீரில் மிதந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

சாத்தனூர் அணையில் உள்ள மீன்கள் திடீரென இருப்பதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய சாத்தனூர் அணையில் உள்ள தண்ணீரை சோதனை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இனிமேலும் இது போன்று ஏராளமான மீன்கள் இறக்கும் சம்பவங்கள் நிகழாதவாறு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து சாத்தனூர் அணையில் உள்ள மீன்களை பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Conclusion:இனிமேலும் இது போன்று ஏராளமான மீன்கள் இறக்கும் சம்பவங்கள் நிகழாதவாறு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து சாத்தனூர் அணையில் உள்ள மீன்களை பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.