ETV Bharat / state

ஆடி பூரம்: அண்ணாமலையார் கோயில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு

author img

By

Published : Aug 11, 2021, 7:30 AM IST

அண்ணாமலையார் கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு
அண்ணாமலையார் கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு

திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடி பூர உற்சவ நிறைவையொட்டி பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆண்டு தோறும் நடைபெறும் ஆடி பூர பிரம்மோற்சவ விழா, மிகவும் பிரசித்தி பெற்றது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி பூர பிரம்மோற்சவ விழா, கடந்த, 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்ற இந்த ஆடி பூர விழாவில் 10ஆம் நாளான இன்று (ஆக.11) அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு
அண்ணாமலையார் கோயில் பராசக்தி அம்மன்

தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில், பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதையடுத்து, பராசக்தி அம்மன், வளைகாப்பு மண்டபத்தில் எழுந்திருளிய நிலையில், அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு
அம்மனுக்கு தீர்த்தவாரி
அண்ணாமலையார் கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு
அம்மனுக்கு சிறப்பு பூஜை

அதன் பிறகு சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 11

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.