ETV Bharat / state

அண்ணாமலையார் கோயில் காணிக்கை எண்ணும் பணி! ரூ.1.3/4 கோடியை தாண்டிய காணிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 10:13 AM IST

Updated : Sep 23, 2023, 11:18 AM IST

ரூ.1.3/4 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்
திருவண்ணாமலை கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 1 கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ரூபாய் காணிக்கை வசூலாகி உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது

திருவண்ணாமலை கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாதம் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ரூபாய் வசூலாகி உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயில்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டு பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டம், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து செல்கின்றனர்.

இதையும் படிங்க: பீகார் துணை முதல்வர் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது சிறப்பு நீதிமன்றம்!

மேலும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று (செப்.22) காலை தொடங்கி இரவு 7.00 மணி வரை நடைபெற்றது.

இந்நிலையில், பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கையை கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர் குழு முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, காணிக்கை எண்ணும் பணியானது வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. இதில் ரொக்கமாக 1 கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ரூபாய், 230 கிராம் தங்கம், 993 கிராமம் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: "சென்னையில் முக்கிய சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்" - அமைச்சர் எ.வே.வேலு!

Last Updated :Sep 23, 2023, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.